மேரி எம். கிளாக்கின்

அமெரிக்க விஞ்ஞானி

மேரி எம். கிளாக்கின் (Mary M. Glackin) ஒர் அமெரிக்க விஞ்ஞானியாவார். இவர் அமெரிக்க வானிலை ஆய்வு சங்கத்தின் (ஏ.எம்.எசு) 2020 ஆம் ஆண்டிற்கான தலைவராக உள்ளார்[1].

தொழில் தொகு

முன்னதாக இண்டர் நேசனல் பிசினசு மெசின்சு நிறுவனத்திற்கு சொந்தமான தி வெதர் நிறுவனத்தில்[2] கிளாக்கின் முதுநிலை துணைத் தலைவராக இருந்தார். தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகச் செயல்பாடுகளுக்கான துணைச் செயலாளர்[3] பதவியிலிருந்து 2012 ஆம் ஆண்டு கிளாக்கின் ஓய்வு பெற்றார். இங்கிருக்கும்போது தேசிய வானிலை சேவை, உலகளாவிய சுற்றுச்சூழல் மாற்றத்திற்கான ஆய்வுத் திட்டம் [4] போன்ற அமைப்புகளில் 34[5] ஆண்டுகளாக பல்வேறு பொறுப்புகளில் கிளாக்கின் பணியாற்றியுள்ளார்.

கல்வி தொகு

மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் கிளாக்கின் 1984 ஆம் ஆண்டு இளம் அறிவியல் பட்டம் பெற்றார். வளிமண்டல அறிவியலில் பாடத்தை முக்கியமானதாகக் கொண்ட கணினி அறிவியல் பாடம் இவரது பாடப்பிரிவாக இருந்தது[4].

விருதுகள் தொகு

கிளாக்கின் அமெரிக்க வானிலை ஆய்வு கழகத்தின் சக உறுப்பினராக இருந்தார். இச்சமூகத்திற்கு இவரளித்த சிறந்த சேவைக்காக சார்லசு பிராங்க்ளின் புரூக்சு விருது 2004 ஆம் ஆண்டு கிளாக்கினுக்கு வழங்கப்பட்டது [4]. அமெரிக்க குடியரசுத் தலைவர் வழங்கும் தரவரிசை விருதை இரண்டு முறையும், அமெரிக்க வணிகத்துறை வழங்கும் வெள்ளி மற்றும் வெண்கலப்பதங்களையும் வென்றுள்ளார் [4]. பொதுநிர்வாக தேசிய அகாடமியின் உறுப்பினராகவும் கிளாக்கின் இருந்துள்ளார் [6].

மேற்கோள்கள் தொகு

  1. "Past Presidents' Directory". American Meteorological Society (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-03-05.
  2. "Board Members". dels.nas.edu. பார்க்கப்பட்ட நாள் 2020-03-05.
  3. "Mary Glackin retires from NOAA | Living on the Real World" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-03-05.
  4. 4.0 4.1 4.2 4.3 "Mary M. Glackin". American Meteorological Society (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-09-07.
  5. Glackin, Mary (September 15, 2019). "Trump administration politics have no place in weather forecasting and have damaged trust". The Washington Post. https://www.washingtonpost.com/weather/2019/09/15/trump-administration-politics-have-no-place-weather-forecasting-have-damaged-trust/. 
  6. "National Academy Of Public Administration". National Academy Of Public Administration. பார்க்கப்பட்ட நாள் 2020-03-05.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேரி_எம்._கிளாக்கின்&oldid=3850435" இலிருந்து மீள்விக்கப்பட்டது