மேரி எலன் உரைட் கிரேவுட்டர்

மேரி எலன் உரைட் கிரேவுட்டர் (Mary Helen Wright Greuter) (திசம்பர் 20, 1914 – அக்தோபர் 23, 1997) ஓர் அமெரிக்க வானியலாளரும் வரலாற்றாசிரியரும் ஆவர்,[1] இவர் மாந்தரினவியல், தொல்லியல், இயற்பியல் உட்பட, அறிவியல் புலங்களின் வரலாற்றைப் பற்ரியும் முறையியல் பற்றியும் எழுதியும் பதிப்பித்தும் உள்ளார்.

மேரி எலன் உரைட் கிரேவுட்டர்
Mary Helen Wright Greuter
மேரி எலன் உரைட் கிரேவுட்டர்
பிறப்பு(1914-12-20)திசம்பர் 20, 1914
வாழ்சிங்டன் டி.சி.
இறப்புஅக்டோபர் 23, 1997(1997-10-23) (அகவை 82)
வாழ்சிங்டன் டி.சி.
மாரடைப்பு
தேசியம்அமெரிக்கர்
துறைவானியல், வரலாறு
பணியிடங்கள்மவுண்ட் வில்சன் வான்காணகம்
கல்விமதீரா பள்ளி
கல்வி கற்ற இடங்கள்பெனட் இளநிலைக் கல்லூரி
துணைவர்ஜான் பிராங்ளின் ஆக்கின்சு

இளமை

தொகு

இவர் வாழ்சிங்டன் டி.சி.யில் பிறந்தார். இவரது தந்தையார் புவி இயற்பியலாளராகிய பிரெடெரிக் யூகின் உரைட் ஆவார்;தய்யர் கத்லீன் எதெல் பின்லே ஆவார். இவர் தொழில்முறையில் உரைட் எனும் குடும்ப்ப் பெயரால் அழைக்கப்பட்டவர் ஆவார். இவரது உடன்பிறப்புகளாக வில்லியம் எஃப். உரைட், கென்னத் ஏ. உரைட் ஆகிய இருவரும் அடங்குவர்.[2] Wright was educated at Madeira School.[3] இவர் 1934 இல் தன் பென்னெட் இளையோர் கல்லூரியில் படித்து முடித்து வாசர் கல்லூரியில் இளவல் பட்டத்தை 1937 இல் பெற்றார். வானியல் முதுவர் பட்டத்தை வானியலில் 1939 இல் பெற்றார்.[2]

வாழ்க்கைப்பணி

தொகு

கார்னிகி அறிவியல் நிறுவனத்தின் மவுண்ட் வில்சன் வான்காணக நிலாத் திட்டத்தை வழிநடத்திய தன் தந்தை வழியாக அவ்வான்காணக மக்களோடு நஙு அரிமுகமாகி இருந்தார். இவர் 1937 இல் அங்கு தொலைநோக்கி வரலாறு பற்றி ஆய்வுசெய்யும் உதவியாளராக பணியில் சேர்ந்தார்;[4] அந்த ஆண்டே வாசர் கல்லூரி வான்காணக உதவியாளரானார்.[3] இவர் 1942-43 இல் அமெரிக்க நாவாய் வான்காணக இளநிலை உதவியாளராக வாழ்சிங்டன் டி.சி,யில் பணிபுரிந்தார்; அப்போது பலோமார் வான்காணகத்தோடு தொடர்பு கொண்டிருந்தார்.[2] இவர் 1943 இல் இயல்பாக எழுதும் ஆசிரியரும் பதிப்பாளரும் ஆனார்.[5] இவரது மிகச் சிறந்த நூல்களில் புடவித் தேட்ட வல்லுனர்: ஜார்ஜ் எல்லேரி ஏலின் வாழ்க்கை (1966), வானளந்த பெண்மணி: மரியா மிட்செலின் வாழ்க்கை (1949) ஆகியவை அடங்கும்.[2] உரைட் அமஎரிக்க வானியல் கழகம், அறிவியல் குமுக வரலாறு, பன்னாட்டு வானியல் ஒன்றியம் ஆகியவற்றின் உறுப்பினரும் ஆவார்.[5]

சொந்த வாழ்க்கை

தொகு

இவர் முதலில் ஜான் பிராங்ளின் ஆக்கின்சு எனும் ஓவியரை மணந்து மணவிலக்கு பெற்றார் பின்னர், இரேனே கிரேவுட்டரை 1967 இல் மணந்தார்.[5] இருந்தும் இவருக்குக் குழந்தைகள் ஏதும் இல்லை.[6] இவர் கோடைகளில் சகாசுதவேகா திவில் தங்கினார்;[7] இவருக்கு வாழ்சிங்டன், நியூசெர்சி, நாந்துகெட் ஆகிய இடங்களைல் வீடுகள் வைத்திருந்தார். இவருக்குச் சிற்பவேலை செய்ய மிகவும் பிடிக்கும். இவர் மாரடைப்பால் 1997 இல் வாழ்சிங்டன் டி.சி யில் இறந்தார்[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Mary Helen Wright Greuter (1914-1997)". Smithsonian Institution. பார்க்கப்பட்ட நாள் 20 January 2013.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Saxon, Wolfgang (November 2, 1997). "Helen Wright Greuter, 82, Astronomer and Author". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/1997/11/02/us/helen-wright-greuter-82-astronomer-and-author.html. பார்த்த நாள்: 20 January 2013. 
  3. 3.0 3.1 DeVorkin, David (November 1997). "H. A. D. News". The Newsletter of the Historical Astronomy Division of the American Astronomical Society (42): 6. https://docs.google.com/viewer?a=v&q=cache:BVCCgzJe8XwJ:had.aas.org/hadnews/HADN42.pdf+&hl=en&gl=us&pid=bl&srcid=ADGEESiicSlkJl9S8b82cwNvjAnW3xn3rQLumxHip_DrcJwJvlZ5Lyt6a3RbtuYjRccamXkQE2WtOIJqm8gvIY7HwsSuJ4KQuIrp0-Ws4OsCjv06oP41FowfjIc42psJnm1RDC6EPoye&sig=AHIEtbT-FSsV47Sk6eJN5xpovkFEOOk7yg. 
  4. Current Biography Yearbook. H. W. Wilson Co. 1957. p. 657. பார்க்கப்பட்ட நாள் 20 January 2013.
  5. 5.0 5.1 5.2 Reginald, R.; Menville, Douglas; Burgess, Mary A. (September 2010). Science Fiction and Fantasy Literature. Wildside Press LLC. pp. 1134–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-941028-77-6. பார்க்கப்பட்ட நாள் 20 January 2013.
  6. United States Naval Observatory (1999). Proceedings, Nautical Almanac Office Sesquicentennial Symposium: U.S. Naval Observatory, March 3-4, 1999. U.S. Naval Observatory. p. 172. பார்க்கப்பட்ட நாள் 20 January 2013.
  7. Smith, Susan (10 August 1993). The first summer people: the Thousand Islands 1650-1910. Stoddart. p. 11. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-55046-037-7. பார்க்கப்பட்ட நாள் 20 January 2013.