மேற்குலக உணவுமுறை மாதிரி

மேற்குலக உணவுமுறை மாதிரி (Western dietary pattern) அல்லது அமெரிக்க உணவுச் சீர்தரம் (Standard American Diet) என்பது மேற்குலக நாடுகளில் பலரால் உண்ணப்படும் உணவுகள், உணவுப் பழக்கங்களைக் குறிக்கிறது. இந்த உணவுகள் தற்போது இந்தியா, இலங்கை போன்ற வளர்ந்து வரும் நாடுகளிலும் பரவி வருகின்றது. மேற்குலக உணவுமுறை அதி கூடிய செந்நிறமான இறைச்சிகள் (red meets), சீனித் தீன்கள் (sugary desserts), கொழுப்புக் கூடிய உணவுகள், கோதுமை மா மற்றும் பெருந்தானியங்களால் (refined grains) ஆனது.[1] இதில் பெரும்பாலும் சீனி அதிகம் கொண்ட கோலாக்கள் (sugary drinks), பதப்படுத்தப்பட்ட உணவுகள் (processed food), கொழுப்புக் கூடிய பாற்கட்டிகள் மற்றும் பாலுணவுகளைக் கொண்டிருக்கும்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Gandey, Allison (August 17, 2007). "Diet Appears to Influence Colon Cancer Outcomes". Medscape.
  2. Halton, Thomas L; Willett, Walter C; Liu, Simin; JoAnn E. Manson; Stampfer, Meir J; Hu, Frank B (2006). "Potato and french fry consumption and risk of type 2 diabetes in women". The American Journal of Clinical Nutrition 83 (2): 284–90. பப்மெட்:16469985. http://www.ajcn.org/cgi/pmidlookup?view=long&pmid=16469985.