மேற்கு போனா தளம்

தொல்லியல் தளம்

மேற்கு போனா தளம் (West Bona Site) அமெரிக்காவுக்குச் சொந்தமான குவாம் தீவின் தென்மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள சாண்டா ரீட்டா கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு தொல்பொருள் இடமாகும். மேற்கு போன்யா தளம் என்றும் இப்பெயர் உச்சரிக்கப்படுகிறது. குறைந்தது ஏழு நிற்கும் பெரிய கற்தூண்கள் கொண்ட ஒரு வரலாற்றுக்கு முந்தைய கிராம தொல்லியல் தளம் இங்கு உள்ளடங்கியுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை நல்ல நிலையில் இல்லை என்றாலும் மிகப்பெரிய பன்னிரண்டு கற்களுடன் உள்ள ஒரு தளம் நல்ல நிலையில் உள்ளது.

மேற்கு போனா தளம்
West Bona Site
ஐ.அ. தேசிய வரலாற்று இடங்கள் பதிகை
அமெரிக்க கடற்படை புகைப்படம்
அண்மை
நகரம்:
சாண்டா ரீட்டா, குவாம்
பரப்பளவு: 3 ஏக்கர்கள் (1.2 ha)
நிர்வாக அமைப்பு: கூட்டாட்சி
தே.வ.இ.பவில்
சேர்ப்பு:
மார்ச்சு 26, 1979
தே.வ.இ.ப 
குறிப்பெண் #:
79003746[1]

கதிரியக்கக் கார்பன் காலக்கணிப்பு இந்த தளத்தின் ஆரம்ப ஆக்கிரமிப்பை 1285 மற்றும் 1435 ஆண்டுகளுக்கு இடையில் வைக்கிறது. எனவே இதன் பழமை 1500 ஆண்டுகளை எட்டும் என கருதப்படுகிறது. இத்தளத்தை அணுக இராணுவ அனுமதி தேவைப்படும். இங்கு செல்லும் பாதை ஒரு சுற்றுச்சூழல் பாதுகாப்பு பாதை வழியாக செல்கிறது. [2]

1974 ஆம் ஆண்டில் இந்த தளம் வரலாற்று இடங்களின் தேசிய பதிவேட்டில் பட்டியலிடப்பட்டது. [1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "National Register Information System". National Register of Historic Places. National Park Service. 2010-07-09.
  2. "Draft Joint Region Marianas Access Plan" (PDF). Naval Facilities Engineering Command Marianas. Archived from the original (PDF) on 2015-06-24. பார்க்கப்பட்ட நாள் 2015-07-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேற்கு_போனா_தளம்&oldid=3568899" இலிருந்து மீள்விக்கப்பட்டது