மேற்கோட்குறி
ஒற்றை மேற்கோள் குறி சிறப்புக் காரணம் கருதி ஏதேனும் ஒரு சொல்லை அல்லது தொடரைக் குறித்துக் காட்டுகின்ற இடங்களிலும், உரையாடலுக்குள் இடம்பெறும் மற்றோர் உரையாடலைக் குறிக்கவும் இடப்படுகின்றது.[1][2][3]
எடுத்துக்காட்டு:
- பரதன், “நான் என் செய்வேன்! அண்ணன், ‘நீபோ. நான் பதினான்கு ஆண்டுகள் கழித்தே வருவேன்’ என்று சொன்னார். அதனால் வந்துவிட்டேன்".
பிரித்துக் காட்டுதற்கும், பிறருடையது என்று அறிவித்தற்கும், பழமொழிகளைத் தெரிவித்தற்கும் ஒற்றை மேற்கோள் பயன்படுத்தப் படுகின்றது.
எடுத்துக்காட்டு:
- ‘வு’, ‘வூ’, ‘வொ’, ‘வோ’ என்னும் எழுத்துக்கள் சொல்லுக்கு முதலில் வரா.
- ‘முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்’ என்பது பழமொழி.
இரட்டை மேற்கோள் குறி: தன் கூற்றை வலியுறுத்தத் தன்னினும் சிறந்தோர் கூறியவற்றை எடுத்தாளுகின்ற இடங்களிலும், பிறர் உரையாடலை அப்படியே கூறுமிடங்களிலும் இரட்டை மேற்கோள் இடவேண்டும்.
எடுத்துக்காட்டு:
- “அறம்தலை நின்றார்க்கு இல்லை அழிவு” என்றார் கம்பர்.
- நெடுஞ்செழியன், “இப்போரில் நான் வெல்லாமற் போனால் என் குடிகள் தூற்றும் கொடுங்கோலனாவேனாக!” என்று சூளுரைத்தான்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Lunsford, Susan (2001). 100 Skill-Building Lessons Using 10 Favorite Books: A Teacher's Treasury of Irresistible Lessons & Activities That Help Children Meet Learning Goals In Reading, Writing, Math & More. Teaching Strategies. p. 10. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780439205795.
- ↑ Hayes, Andrea (2011). Language Toolkit for New Zealand 2. Cambridge University Press. p. 17. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781107624702.
- ↑ "Quotation mark". Daube.ch. 6 November 1997. Archived from the original on 8 February 2011. பார்க்கப்பட்ட நாள் 11 August 2015.