மேலோனேட்டு
மேலோனேட்டு (Malonate) என்பது CH2(COO)22− என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். புரோப்பேண்டையோயேட்டு அயனி என்ற பெயராலும் இச்சேர்மத்தை அழைக்கலாம். மேலோனிக் அமிலத்திலிருந்து இரண்டு ஐதரசன் அயனிகளை நீக்கினால் கிடைப்பது மேலோனேட்டு ஆகும்.
- டையீத்தைல் மேலோனேட்டு, (C2H5)2(C3H2O4),
- டைமெத்தில் மேலோனேட்டு, (CH3)2(C3H2O4),
- டைசோடியம் மேலோனேட்டு, Na2(C3H2O4).
மேலோனிக் அமிலத்தின் மேற்கண்ட உப்புகள் மற்றும் எசுத்தர்கள் உள்ளிட்ட வேதிப்பொருட்கள் மேலோனேட்டு சேர்மங்கள் எனப்படுகின்றன. சக்சினேட்டு டி ஐதரசனேசு என்ற நொதியின் நொதிவினைதடுப்பானாக மேலோனேட்டு செயல்படுகிறது. இந்நொதியின் வினைதளத்தில் வினைபுரிதலேதுமின்றி மேலோனேட்டு பிணைந்து, வழக்கமான நொதியின் தளமான சக்சினேட்டுடன் போட்டியிடுகிறது. நொதியின் தளப்பொருள் சக்சினேட்டுக்குச் சமமான மேலோனேட்டு உயிரினச் சுவாச முறையைக் குறைக்கிறது. ஐதரசனேற்றத்தை நீக்கம் செய்யத் தேவையான சக்சினேட்டைக் காட்டிலும் ஒரு -CH2-CH2 தொகுதியைக் குறைவாகப் பெற்றுள்ளது மேலோனேட்டு ஆகும்[1][2].
இதையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Potter, V. R.; Dubois, K. P. (1943). "Studies on the Mechanism of Hydrogen Transport in Animal Tissues : Vi. Inhibitor Studies with Succinic Dehydrogenase". The Journal of General Physiology 26 (4): 391–404. doi:10.1085/jgp.26.4.391. பப்மெட்:19873352.
- ↑ Dervartanian DV, Veeger C. (November 1964). "Studies on succinate dehydrogenase. I. Spectral properties of the purified enzyme and formation of enzyme-competitive inhibitor complexes". Biochim. Biophys. Acta 92: 233–47. doi:10.1016/0926-6569(64)90182-8. பப்மெட்:14249115.