மேல்நிலைப்பட்டி
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகில் உள்ள கிராமம். இங்கு சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றன.
அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இங்கு உள்ளது ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளிக்கூடம் இதில் தற்பொழுது தோராயமாக 40 குழந்தைகள் பயின்று வருகின்றனர்.
Government of India (GOI) குடியரசு தலைவரால் வழங்கப்படும் (நிர்மல் கிராம் புரஸ்கர்) Nirmal Gram Puraskar பசுமை கிராமம் விருது பெற்ற ஊராட்சி இது. முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்காலம் அவர்களால் அந்த விருது வழங்கப்பட்டது.
பெற்ற விருதுகள்/ முக்கியமானவைகள் | விபரம் |
---|---|
மக்கள் தொகை | 1500 |
விருதுகள் | பசுமை கிராமம் விருது (நிர்மல் கிராம் புரஸ்கர்) |
பள்ளிக்கூடம் | அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இங்கு தற்பொழுது தோராயமாக 40 குழந்தைகள் பயின்று வருகின்றனர் |
கோவில்கள் | திருவிழாக்கள் மற்றும் வரலாற்று விபரங்கள் |
ஓம் ஸ்ரீ மென்னாண்டார் மூர்த்தி திருக்கோயில் | இந்த கோயில் வரலாறு: ஆவுடையார் கோயில் கட்டும்பொழுது இந்த வழியில் தான் கோயிலுக்கு சிற்பங்கள் செய்ய கற்கள் கொண்டு செல்லப்பட்டன , குறிப்பிட்ட இந்த இடத்தில் இருந்து மாட்டு வண்டி நகரவில்லை. பிறகு இங்கு விழுந்த அந்த கல்லை வைத்து பிள்ளையார் செய்து வழிபட்டுச்சென்றதாக கோயில் கல்வெட்டுகள் கூறுகின்றன. இந்த கோயில் இந்திய அறநிலையத் துறையால் தற்பொழுது பராமரிக்க பட்டு வருகிறது
முக்கியத் திருவிழா ; சித்திரை மாதம் சித்திரா பௌர்ணமி திருவிழா இங்கு வெகு விமர்சையாக கொண்டாடப்படும் அன்று இரவு ஊரில் உள்ள கலையரங்கில் புராண நாடகம் நடைபெறும். அன்றிலிருந்து ஏழாம்நாள் சந்தனக்காப்பு திருவிழா நடைபெறும். கோயில் திருவிழா காலங்களில் ஊர் மக்களால் அன்னதானம் வெகு சிறப்பாக நடைபெறும் |
ஓம் ஸ்ரீ பொன்னாச்சி அம்மன் திருக்கோயில் | 1.குதிரெய் யெடுப்பு (புறவியெடுப்பு திருவிழா)
2.சுற்று பொங்கல்; ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து அன்று இரவு கோவிலில் பொங்கல் வைத்து அம்மனை வழிபடுவார்கள். |
ஓம் ஸ்ரீ கேசவநம்பி அய்யனார் திருக்கோயில் | குதிரெய் யெடுப்பு (புறவியெடுப்பு திருவிழா) |