மேல்நிலைப்பட்டி மென்னாண்டார் மூர்த்தி கோயில்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இக்கோயில் கி.பி 1287-ல் சடையவர்மன் சுந்தரபாண்டியனால் கட்டப்பட்டது. கானநாட்டு, கெங்குன்ற நாட்டு மேல்நிலை, மேல்நின்ற பிள்ளையார் கோவில் தானத்தார் இதே ஊரைச்சேர்ந்த, அரையர்களில் ஒருவரான குலசேகர, வீரசேகர நாடாழ்வார் இக்கோவிலுக்கு வடவகை நாட்டு அழிசிக் குடிவயலில் தேவதானமாக வழங்கப்பட்ட நிலத்தை உழவடைத்திட்டாக அளித்தனர். இந்நிலத்தில் ஏற்கனவே உழுது விவசாயம் செய்துவரும், விவசாய பெருங்குடிகளை நீக்காது இருக்க வேண்டும் என்று அவருக்கு வேண்டுகோள் இடப்பட்டது. போகத்தில் குலசேகர, வீரசேகர நாடாழ்வார் தனக்கு அளிக்கப்பட்ட நிலத்தில் சம்பாநெல் பயிரிடவும், கோடைபோகத்தில், குருவைநெல் பயிரிடவும், எள்ளு, வரகு, தினை, பயிரிடவும் உரிமைப்பெற்றார். மேலும் நிலத்தால் வந்த வருமானத்தின் ஒரு பகுதியை அமுது படைக்கும் பிறசெலவுகளுக்கு வழங்க வேண்டுமென, தானத்தாரால் கூறப்பட்டு அதன்படி நடக்க சம்மதித்துள்ளார் என்று கானநாட்டு, கெங்குன்ற நாட்டு மேல்நிலை, மேல்நின்ற பிள்ளையார் கோயில் கல்வெட்டு கூறுகின்றது.