மேல் செலேடர் நீர்த்தேக்கம்

மேல் செலேடர் நீர்த்தேக்கம், சிங்கப்பூரின் மூன்றாவது பெரிய நீர்தேக்கமாகும். இது சிங்கப்பூரின் மத்திய நீர்பிடிப்பு பகுதியில் உள்ளது.

வரலாறு தொகு

முன்பு செலேடர் நீர்த்தேக்கம் என்று அறியப்பட்ட இந்த நீர்த்தேக்கம், 1986 ஆம் ஆண்டு செலேடர் ஆற்றை தடுத்தும் கீழ் செலேடர் நீர்த்தேக்கம் கட்டிமுடிக்கப்பட்ட பின்னர் மேல் செலேடர் நீர்த்தேக்கம் என்று அழைக்கப்பட்டது. 1940 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த இடம் அதிகாரப்பூர்வமாக 1969 ஆம் ஆண்டு, பிரித்தானிய இளவரசி அலெக்சாண்ட்ரா அவர்கள்ளல் திறக்கப்பட்டது.

சிறப்புக் கூறுகள் தொகு

இங்கு முதலைகள் இருப்பதாக பல வதந்திகள் உண்டு. எச்சரிக்கையாக அதற்குண்டான விளக்க அறிவிப்புகளை காணலாம். இதன் விளிம்பில் சிங்கபூர் விலங்கியல் பூங்க, மாண்டாய் ஆர்கிட் தோட்டம் போன்றவை உள்ளன . உடற்பயிற்சி, நடைபயிற்சி செய்வோர் அதிகம் இந்த இடத்தை நாடுகின்றனர்.

மேற்கோள்கள் தொகு