மேல் முறையீடு

சட்டத்தில் மேல் முறையீடு (appeal) என்பது ஓர் அலுவல்முறை தீர்ப்பை முறையாக மாற்றும்படி வேண்டுவதற்கான முறைமை ஆகும். பொதுவாக, சில பதிவான தரவுகளை மீளாயும் மேல் முறையீடுகளாகவும் சில முதலிலிருந்தே மீளாயும் (de novo) மேல் முறையீடுகளாகவும் உள்ளன. பதிவான தரவுகளின் மேலான வழக்குகளில் முன்பு தீர்ப்பு வழங்கியவரது முடிவு குறித்து வழக்காடப்படுகிறது; சட்டத்தை சரியாக பயன்படுத்தவில்லை, உண்மைநிலையை மாறாகப் புரிந்து கொண்டிருத்தல், தனது எல்லையை மீறி தீர்ப்பு வழங்கியிருத்தல், அதிகார முறைகேடு, ஒருபக்கச் சார்பான நிலை, ஏற்றுக்கொள்ளவியலாச் சான்றை கருத்தில் கொள்வது அல்லது ஏற்றுக் கொள்ளத் தக்க சான்றை கருதாது முடிவடுத்தல் போன்றவை சில காரணங்களாக அமையும். முதலிலிருந்து மீளாயும் முறையீடுகளில் மற்றொரு நடுவர் முந்தையத் தீர்ப்பை கருத்தில் கொள்ளாது வழக்கை முற்றிலும் திரும்ப விசாரித்து தீர்ப்பு வழங்கப்படுகிறது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=மேல்_முறையீடு&oldid=3054721" இலிருந்து மீள்விக்கப்பட்டது