மேல் முறையீடு (துடுப்பாட்டம்)

துடுப்பாட்டத்தில் மட்டையாடும் துடுப்பாட்ட வீரரை ஆட்டமிழப்பதற்காக களத்தடுப்பு செய்யும் எதி

மேல்முறையீடு (Appeal (cricket) என்பது துடுப்பாட்டத்தில் மட்டையாடும் துடுப்பாட்ட வீரரை ஆட்டமிழப்பதற்காக களத்தடுப்பு செய்யும் எதிரணி வீரர்கள் நடுவரிடம் கேட்கும் முறையினைக் குறிக்கிறது. துடுப்பாட்ட சங்கத்தின் 31 ஆம் விதியின் படி எதிரணி வீரர்கள் மேல்முறையீடு செய்யாமல் நடுவர் மட்டையாளரை ஆட்டமிழப்புச் செய்ய இயலாது.[1] பல சமயங்களில் மட்டையாளர் ஆட்டமிழந்தது தெரியாமல் எதிரணி வீரர்கள் முறையீடு செய்யாத காரணத்தினால் நடுவர்கள் அவர்களை ஆட்டமிழந்ததாக அறிவிக்காத பல நிகழ்வுகள் நடந்துள்ளன.[2]

2007, இந்தியாவுக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இங்கிலாந்து வீரர்கள் எல் பி டபிள்யூ கேட்கும் போது

முறையற்ற மேல் முறையீடு

தொகு

கீழ்கானும் நிகழ்வுகள் ஐ.சி.சி துடுப்பாட்ட நடத்தை விதிகளின் கீழ், இது முறையற்றதாகக் கருதப்படுகிறது:

  • அதிகப்படியான முறையீடு;
  • ஒரு நடுவரை நோக்கி மிரட்டும் விதத்தில் முறையீடு செய்தல்
  • மட்டையாளர் ஆட்டமிழக்கவில்லை எனத் தெரிந்தே மேல் முறையீடு செய்தல் .

இவாறான நிகழ்வுகளில் ஈடுபட்டால் அபராதம் அல்லது போட்டிகளில் விளையாட தடை போன்ற தண்டனைகள் கள நடுவர்களால் வழங்கப்படுகிறது.

குறிப்புகள்

தொகு
  1. "Law 31 – Appeals". MCC. பார்க்கப்பட்ட நாள் 29 September 2017.
  2. "Smith owns up to edge on 97". http://www.espncricinfo.com/story/_/id/18289545/steven-smith-owns-edge-97. பார்த்த நாள்: 2018-01-14.