மேல ஓமநல்லூர் பிரணவேசுவரர் கோயில்
மேல ஓமநல்லூர் பிரணவேசுவரர் கோயில் என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், திருநெல்வேலி மாவட்டதில் உள்ள மேல ஓமநல்லூர் என்ற ஊரில் உள்ள சிவன் கோயிலாகும்.
அமைவிடம்
தொகுதிருநெல்வேலி - பத்தமடை நெடுஞ்சாலையில் 15 கி.மீ. தொலைவில் பிராஞ்சேரி பேருந்து நிறுத்தம் உள்ளது. அங்கிருந்து தெற்கே மூன்று கி.மீ தொலைவில் மேல ஓமநல்லூர் அமைந்துள்ளது.[1]
கோயில் அமைப்பு
தொகுபிரணவேசுவரர் கோயிலானது மேல ஓமநல்லூரில் கிழக்கு நோக்கி உள்ளது. இக்கோயிலானது தெப்பக்குளம், வசந்த மண்டபம், முக மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை போன்ற அமைப்புகளைக் கொண்டுள்ளது.
முதன்மை வாயிலை அடுத்து பலிபீடம் ,நந்தி மண்டபம், கொடிமரம் ஆகியவை உள்ளன. கோயிலில் உள்ள வசந்த மண்டபமானது பிரம்மாண்டமாகச் சிற்பத் தூண்களுடன் காட்சியளிக்கிறது. முக மண்டபத்தின் வலது புறமாக செண்பகவல்லித் தாயாரின் சந்நிதி உள்ளது. மகா மண்டபத்தின் வலப்புறம் நடராசர் சந்நிதி உள்ளது. அர்த்த ம்ண்ட வாயிலில் அனுக்ஞை விநாயகர், வள்ளி தெய்வானை உடனுறை சுப்பிரமணியர் நிலைகள் உள்ளன. கருவறையில் பிரணவேசுவரர் இலிங்க வடிவில் உள்ளார். கருவறையின் மேலே நகர விமானம் அமைந்துள்ளது.
இக்கோயியில் காசி விசுவநாதர், சொக்கநாதர், கைலாசநாதர், சங்கரேசுவரர், பிரணவேசுவரர் என ஐந்து மூர்த்திகளின் சந்நிதிகள் உள்ளன.[2]
வழிபாடு
தொகுஇக்கோயிலில் நாள்தோறும் காலை எட்டு மணிமுதல் பத்து மணி மரையிலும், மாலை நான்கு மணிமுதல் ஆறு மணிவரையிலும் என இருகால பூசைகள் நடக்கின்றன.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ பிறவிப்பிணி போக்கும் பிரணவேஸ்வரர் - Kungumam Tamil Weekly Magazine. http://www.kungumam.co.in/APArticalinnerdetail.aspx?id=2629&id1=50&id2=18&issue=20150501#google_vignette.
- ↑ (in ta) கங்கையை மணந்த கங்காதரன்: மேல ஓமநல்லூர் ஸ்ரீ பிரணவேஸ்வரர். 2024-03-28. https://www.hindutamil.in/news/supplements/anantha-jothi/1222525-mela-omanallur-shri-pranaveshwara.html.
- ↑ மலர், மாலை (2019-05-18) (in ta). எம பயம் நீக்கும் ஓமநல்லூர் பிரணவேஸ்வரர் கோவில். https://www.maalaimalar.com/devotional/temples/2019/05/18070010/1242250/omanallur-pranav-eshwara-temple.vpf.