மைக்கேல் இயன் புரூசு

வேதியியலாளர்

மைக்கேல் இயன் புரூசு (Michael Ian Bruce) என்பவர் அடிலெய்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய இயற்பிய மற்றும் கனிம வேதியியல் பேராசிரியர் ஆவார். 1938 ஆம் ஆண்டில் பிறந்த இவர் இங்கிலாந்தில் கல்வி கற்று 1973 ஆம் ஆண்டில் அடிலெய்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக நுழைந்தார். 1982 முதல் இறுதியாக 2009 ஆம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெறும் வரை அப்பல்கலைக்கழகத்தில் அங்காசு இருக்கை வேதியியல் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.

பங்களிப்பு தொகு

உலோகத் தொகுதிகள் பிரிவில் குறிப்பாக ருத்தேனியம் தொடர்பான பிரிவில் பல பங்களிப்புகளை புரூசு வழங்கியுள்ளார்[1].

மரியாதை தொகு

ஆத்திரேலிய அறிவியல் அகாடமியின் உறுப்பினராக 1989 ஆம் ஆண்டு மைக்கேல் இயன் புரூசு தேர்ந்தெடுக்கப்பட்டார்[2][3][4][5].

மேற்கோள்கள் தொகு

  1. Bruce, M. I.; Jensen, C. M.; Jones, N. L. (1989). "Dodecacarbonyltriruthenium, Ru3(CO)12". Inorganic Syntheses 26: 259-61. doi:10.1002/9780470132579.ch45. 
  2. "Bruce, Michael Ian (1938 - )". Biographical Entry. Encyclopaedia of Australian Science.
  3. "Bruce, Michael Ian, FAA (1938-)". trove.nla.gov.au.
  4. "Angas Chair of Chemistry". University of Adelaide.
  5. "Professor Michael Bruce FAA". Australian Academy of Science. Archived from the original on 2018-09-13. பார்க்கப்பட்ட நாள் 2020-03-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்கேல்_இயன்_புரூசு&oldid=3575779" இலிருந்து மீள்விக்கப்பட்டது