மைக்கேல் லார்சன்

பவுல் மைக்கேல் லார்சன் (Paul Michael Larson)[1] (மே 10, 1949 – பெப்ரவரி 16, 1999) என்பவர் 1984 ஆம் ஆண்டில் பிரெ யுவர் லக் என்ற தொலைக்காட்சி விளையாட்டுத் தொடரில் பங்கேற்ற ஒரு அமெரிக்கப் போட்டியாளர் ஆவார். இவர் பரிசுத்தொகையாக $110,237 (2017 ஆம் ஆண்டில் $260.000 இற்கு சமானமானது)[2] மதிப்பளவிற்கு இரொக்கமாகவும் பொருட்களாகவும் ஒரே நாளில் வென்றார். அந்தக் காலகட்டத்தில் தொலைக்காட்சியின் விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றில் வெல்லப்பட்ட அதிகபட்ச தொகையாகும்.  பிரெஷ் யுவர் லக் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த விளையாட்டில் ஒருங்கமைப்புகளை நினைவில் வைத்துக் கொண்டதால் இவ்வெற்றி சாத்தியமாகியது.

உண்மையில் தென்மேற்கு ஓகியோவிலிருந்து, லார்சன் தான் இரொக்கமாக வென்ற பணத்தை, வரியாகவும், நிலம் விற்றல் வாங்கல் தொழிலிலும், முதலீடு செய்தார். இருப்பினும், அவர் சட்டத்திற்குப் புறம்பான திட்டங்களில் முதலீடு செய்ததாக சில சட்டப் பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டியிருந்தது.[1] இதன் விளைவாக, லார்சன் தனது வெற்றியால் ஈட்டப்பட்ட அனைத்துப் பொருட்களையும் போட்டி முடிந்து இரண்டு ஆண்டுகளில் இழக்க நேரிட்டது. பின்னர் அவர் ஃபுளோரிடாவிற்கு இடம் பெயர்ந்தார். அங்கு தனது 49 ஆவது வயதில், அவர் தொண்டைப்புற்றுநோயால் இறந்தார். 1999 ஆம் ஆண்டில் அவரது இறப்பிலிருந்து, லார்சன் வெற்றியடைந்த விளையாட்டு நிகழ்ச்சியானது, பலமுறை மறு ஒளிபரப்பு செய்யப்பட்டது. இவரது வெற்றியும், இழப்பும் கேம் ஷோ நெட்ஒர்க் என்ற தொலைக்காட்சி நிறுவனம் தொடர்பான பிக் பக்ஸ்: தி பிரெஷ் யுவர் லக் ஊழல் (2003 ) மற்றும் கவர் ஸ்டோரி: தி பிரெஷ் யுவர் லக் ஊழல் (2018) என்ற இரண்டு குறும்படங்கள் வெளிவரத் துாண்டுகோலாய் இருந்தன.

விளையாட்டுக்கான தயாரிப்பு

தொகு
   
விளையாட்டுப் பலகையின் ஒரு பகுதி- லார்சன் $110,000 க்கும் மேலான தொகையை வெற்றி கொள்ள நினைவில் வைத்திருந்த முறைமைகள் - கட்டங்கள் 4 மற்றும் 8 ஒருபோதும் வேமியைக் கொண்டிருந்ததில்லை. மாறாக அவை ரொக்கப்பரிசினைத் தரும் (இரண்டாவது சுற்றில் அதற்கும் கூடுதலாக மற்றுமொரு இலவச சுழலுக்கான வாய்ப்பும் கிடைக்கும்)

லார்சன் இந்த நிகழ்ச்சியின் முதல் நிகழ்ச்சி திரையிடப்பட்ட (செப்டம்பர் 1983) சிறிது நேரத்திலிருந்தே நிகழ்ச்சியை உற்று கவனிக்கத் தொடங்கினார். அவர் அவ்வாறு உற்று கவனிக்கும் போது, சமவாய்ப்பு மாறியை உருவாக்கும் குறியானது 18 சதுரங்களைக் கொண்ட பெரிய பலகையில் ஐந்து முறைமைகளிலேயே நகர்வதைக் கவனித்தார். இந்த முறைமைகளை லார்சன் தன் மனதில் பதிய வைத்துக் கொண்டார். மேலும் அதிகமாக, அவருக்கு சமவாய்ப்பு மாறியின் குறியானது எங்கு, எப்பொழுது இறங்கும் என்பதில் திடமான நம்பிக்கை ஏற்பட்டது. தான் தேர்ந்தெடுக்கும் முறைமைகள் சரியாக உள்ளதா? பெரிய பலகையின் சுற்றுகளில் அவரது கருதுகோள் சரியாக வேலை செய்கிறதா? என்பதைச் சோதிப்பதற்காக லார்சன் தனது காணொலி நாடா பதிப்பியை () வெவ்வேறு கால இடைவெளிகளில் தொலை இயக்கியை வைத்து, நிறுத்தி விளையாண்டு பார்த்தார்.[1]

மேலும், அவர் பெரிய கட்டத்தின் நான்காவது மற்றும் எட்டாவது கட்டங்கள் (இடது மேல் மூலையில் உள்ள #1இலிருந்து கடிகார முள் சுழலும் திசையில்) எப்போதுமே "வேமி" என்ற பேண்டிட்-போன்ற கேலிச்சித்திரப் பாத்திரம் இருந்ததில்லையென்பதையும், பணமதிப்புடைய பரிசினைக் கொண்டதாக இருப்பதையும் கண்டறிந்தார். வேமி என்ற கேலிச்சித்திரப் பாத்திரம் இருக்கக்கூடிய கட்டமாக இருந்தால் அதுவரை பங்கேற்பாளர் சம்பாதித்திருந்த தொகை முழுவதும் தீர்ந்து போகும். மீண்டும், ஆட்டக்காரர் சுழியிலிருந்து தொடங்க வேண்டியிருக்கும். மேலும் குறிப்பாக, இரண்டாவது சுற்றில், சதுரக்கட்டம் #4 எப்போதும் அதிக பணமதிப்பையும், இலவசமாக ஒரு சுற்றைக் கையாள்வதற்கான வாய்ப்பையும் கொண்டு வரும் என்பதையும் அறிந்திருந்தார். இச்செயல் லார்சனின் கோட்பாட்டை மெய்ப்பிப்பதாக இருந்தது. இரண்டாம் சுற்றில் அவர் விருப்பமிருக்கும் வரை தொடர்ந்து இருப்பதற்கும், விளையாட்டுப் பலகையின் மீது தனது கட்டுப்பாட்டை வைத்திருப்பதற்கும் முறைமைகள் பற்றிய அவரது நினைவில் பதிந்திருந்தவை அவருக்குதவின எனலாம்.[1]

1984 ஆம் ஆண்டின் மே மாதத்தில், லார்சன் தனது சேமிப்பின் பெரும்பகுதியை பிரெஷ் யுவர் லக் நிகழ்ச்சியின் திறமை காணும் சுற்றுகளில் கலந்து கொள்வதற்காக லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குப் பறப்பதிலேயே செலவழித்தார். போட்டியின் மேற்பார்வையாளர் பாபி எட்வர்ட்ஸ் லார்சனின் நோக்கங்கள் குறித்து மே 19ஆம் தேதி நடந்த தன்னுடனான நேர்காணலின் போது சந்தேகப்பட்டு, போட்டியில் அனுமதிப்பதற்கு தயங்கினார். ஆனால், நிகழ்ச்சியின் செயல் தயாரிப்பாளர் பில் காரூதர்ஸ் மேற்பார்வையாளரின் சந்தேகத்தை மீறி லார்சனைப் போட்டிக்கு அனுமதித்தார். இதற்காக தனது வருத்தத்தையும் பின்னாளில் பதிவு செய்தார்.[1] லார்சன் நிகழ்ச்சியின் நான்காவது பகுதியின் ஒளிப்பதிவின் போது (1984 சூன் 8 அன்று ஒளிபரப்பத் திட்டமிடப்பட்டது) பங்கேற்பாளராக சேர்த்துக் கொள்ளப்பட்டார்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Big Bucks: The Press Your Luck Scandal (television film). Game Show Network. March 16, 2003.
  2. Consumer Price Index (estimate) 1800–2008. Federal Reserve Bank of Minneapolis. Retrieved March 8, 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்கேல்_லார்சன்&oldid=2993864" இலிருந்து மீள்விக்கப்பட்டது