மைக்கேல் வில்லியம் ஓவந்தேன்
பேரா மைக்கேல் வில்லியம் ஓவந்தேன் (Michael William Ovenden) (1926 – 1987) ஒரு பிரித்தானிய வானியலாளரும் அரசு வானியல் கழக ஆய்வுறுப்பினரும் எடின்பர்கு அரசு கழக ஆய்வுறுப்பினரும் கிளாசுக்கோ வானியல் கழகத்தின் தலைவரும் பிரித்தனியக் கொலம்பியா பல்கலைக்கழக வானியல் பேராசிரியரும் ஆவார்.
மைக்கேல் வில்லியம் ஓவந்தேன் Michael William Ovenden | |
---|---|
பிறப்பு | மே 21, 1926 முசுவெல் கில், இலண்டன், ஐக்கிய இராச்சியம் |
இறப்பு | மார்ச்சு 15, 1987 வாங்கூவர், கனடா | (அகவை 60)
தேசியம் | பிரித்தானியர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | அரசி மேரி கல்லூரி, இலண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் |
பணி | வானியலாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1953–1985 |
வாழ்க்கை
தொகுஇவர் இலண்டனுக்கு வடக்கில் உள்ள முசுவெல் கில்லில் 1926, மே, 21 இல் பிறந்தார். இவர் தன் இளவல் பட்டத்தை இலண்டன் அரசி மேரி கல்லூரியில் 1947 இல் பெற்றார்.[1] இவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தன் முதுகலைப் பட்டத்தைப் பெற்றார்.
இவர் 1953 இல் கிளாசுக்கோ பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகச் சேர்ந்து வானியலில் விரிவுரையாற்றி வந்தார். இவர் 1964 இல் அங்கே முதுநிலை விரிவுரையாளரானார்.
இவர் 1964 இல் எடின்பர்கு அரசு வானியல் கழக ஆய்வுறுப்பினர் ஆனார். இவரது பரிந்துரையாளர்கள் பீட்டர் ஆலன் சுவீட், எர்மன் பிரக், உகு எர்னெசுட்டு பட்லர், பீட்டர் பெல்ஜெட் ஆகியோர் ஆவர்.[2]
இவர் 1966 இல் பிரித்தானியக் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகச் சேர கனடாவுக்குப் புலம்பெயர்ந்தார்.
இவர் 1985 இல் உடல்நலிவால்ஓய்வு பெற்று, கனடா, வாங்கூவரில் 1987 மார்ச்சு 15 இல் மாரடைப்பால் இறந்தார்.
வெளியீடுகள்
தொகு- அண்மை அறிவியல் வளர்ச்சிகள் (1952)
- சூரிய ஈர்ப்புப் புலத்தால் ஓளி விலகுதல் (1952)
- விண்மீன்களை நோக்குதல் (1957)
- செயற்கைக் கோள்கள் (1960)
- புடவியில் உயிரினம் (1962)
- துணைக்கோள் கவர்கைச் சிக்கல் குறித்து (1975) ஜான் பைலுடன் இணைந்து
மேற்கோள்கள்
தொகு- ↑ Roy, A. E. (1988). "Obituary - Ovenden, Michael". Quarterly Journal of the Royal Astronomical Society 29: 90. Bibcode: 1988QJRAS..29...90R.
- ↑ Biographical Index of Former Fellows of the Royal Society of Edinburgh 1783–2002 (PDF). The Royal Society of Edinburgh. July 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-902-198-84-X. Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2017-11-17.
{{cite book}}
: More than one of|archivedate=
and|archive-date=
specified (help); More than one of|archiveurl=
and|archive-url=
specified (help)