மைக்கோயீத்திரோசென்கள்

மைக்கோயீத்திரோசென்கள் (Mycoestrogens) என்பவை பூஞ்சைகளால் உற்பத்தி செய்யப்படும் ஈத்திரோசன்கள் ஆகும். அவற்றுள் சீராலினால் மற்றும் சீராலனால் இரண்டும் முக்கியமான மைக்கோயீத்திரோசென்கள் ஆகும்[1]. பல்வேறு வகையான நாரிழைப் பூஞ்சை இனங்களினால் இவை உற்பத்தி செய்யப்படுகின்றன[2][3]. சீராலினோனை உட்கொண்ட அசைபோடும் விலங்குகளின் உட்புறத்தில் சீராலினால் மற்றும் சீராலனால் இரண்டும் உற்பத்தியாகின்றன[4][5]. ஆல்பா-சீராலனால் என்ற மைக்கோயீத்திரோசனும் பகுதி செயற்கையாக கால்நடைகளில் பயன்படுத்துவதற்காகத் தயாரிக்கப்படுகிறது. இத்தகைய பயன்பாடு ஐரோப்பிய ஒன்றியத்தில் தடை செய்யப்பட்டுள்ளது[6].

உணவுகளில் தொகு

சேமிக்கப்பட்ட தானியங்களில் மைக்கோயீத்திரோசன்கள் காணப்படுகின்றன. அறுவடைக்குப் பின்னர் கிடங்குகளில் சேமிக்கும் காலத்தில் அல்லது தானியங்களின் மீது வளரும் பூஞ்சைகளுடன் சேர்ந்து இவையும் வளர்கின்றன. நொதித்தலுக்கு உள்ளான தீவனங்களிலும் இவற்றை காணவியலும்[7].

வகை தொகு

டிரான்சு சென் மாற்றியன் என்பதும் ஒரு வகையான மைகோயீத்திரோசென் ஆகும்[8].

மேற்கோள்கள் தொகு

  1. Fink-Gremmels, J.; Malekinejad, H. (October 2007). "Clinical effects and biochemical mechanisms associated with exposure to the mycoestrogen zearalenone". Animal Feed Science and Technology 137 (3-4): 326–341. doi:10.1016/j.anifeedsci.2007.06.008. 
  2. Richardson, Kurt E.; Hagler, Winston M.; Mirocha, Chester J. (September 1985). "Production of zearalenone, .alpha.- and .beta.-zearalenol, and .alpha.- and .beta.-zearalanol by Fusarium spp. in rice culture". Journal of Agricultural and Food Chemistry 33 (5): 862–866. doi:10.1021/jf00065a024. 
  3. Hsieh, Han-Yun; Shyu, Ching-Lin; Liao, Chen-Wei; Lee, Ren-Jye; Lee, Maw-Rong; Vickroy, Thomas W; Chou, Chi-Chung (April 2012). "Liquid chromatography incorporating ultraviolet and electrochemical analyses for dual detection of zeranol and zearalenone metabolites in mouldy grains". Journal of the Science of Food and Agriculture 92 (6): 1230–1237. doi:10.1002/jsfa.4687. பப்மெட்:22012692. 
  4. Miles, C. O., A. F. Erasmuson, A. L. Wilkins, N. R. Towers, B. L. Smith, I. Garthwaite, B. G. Scahill, and R. P. Hansen. 1996. Ovine metabolism of zearalenone to α-zearalanol (zeranol). J. Agr. Food Chem. 44: 3244-3250.
  5. Kennedy, D. G., S. A. Hewitt, J. D. McEvoy, J. W. Currie, A. Cannavan, W. J. Blanchflower, and C. T. Elliot. 1998. Zeranol is formed from Fusarium spp. toxins in cattle in vivo. Food Additives and Contaminants 15: 393-400.
  6. Thevis, M., Fußhöller, and W. Schänzer. 2011. Zeranol: doping offence or mycotoxin? A case‐related study. Drug Testing and Analysis 3: 777-783.
  7. "Fungi and selected mycotoxins from pre- and postfermented corn silage". Journal of Applied Microbiology 104 (4): 1034–41. April 2008. doi:10.1111/j.1365-2672.2007.03634.x. பப்மெட்:18005347. 
  8. Marin, S.; Ramos, A.J.; Cano-Sancho, G.; Sanchis, V. (October 2013). "Mycotoxins: Occurrence, toxicology, and exposure assessment". Food and Chemical Toxicology 60: 218–237. doi:10.1016/j.fct.2013.07.047. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்கோயீத்திரோசென்கள்&oldid=2750018" இலிருந்து மீள்விக்கப்பட்டது