மைக் பென்சு

மைக் பென்சு ( Michael Richard Pence 1959 சூன் 7)என்பவர் அமெரிக்காவின் அரசியலாளர், வழக்கறிஞர் மற்றும் 48 ஆவது துணைக்குடியரசுத் தலைவராகப் பதவி வகிப்பவர். 2013 முதல் 2017 வரை இந்தியானா மாநில ஆளுநராகவும் இவர் இருந்தார். [1]

மைக் பென்சு

2016 நவம்பர் 8 இல் டொனால்ட் ட்ரம்ப் அரசுத் தலைவராகவும் மைக் பென்சு துணைத் தலைவராகவும் அமெரிக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

கல்வியும் பட்டமும்

தொகு

இந்தியானா மாநிலத்தில் கொலம்பஸ் என்னும் நகரில் மைக் பென்சு பிறந்தார். 1981 இல் ஆனோவர் கல்லூரியில் வரலாறு படித்துப் பட்டம் பெற்றார். பின்னர் இந்தியானா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று சட்ட அறிஞர் ஆனார். வழக்கறிஞர் தொழில், வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் கலந்து கொண்டு உரையாடுதல் ஆகியவற்றில் ஈடுபட்டார்.

அரசியல் பணிகள்

தொகு

மைக் பென்சு 1988  மற்றும் 1990 இல் அமெரிக்கப் பேரவையில் இடம் பெற்று  போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். ஆனால் 2000இல் வெற்றி அடைந்து அமெரிக்கப் பேரவையில் உறுப்பினர் ஆனார். 2009 முதல் 2011 வரை ரிபப்ளிக்கன் அவுசு மாநாட்டில் தலைவர் பதவி வகித்தார். 2013 இல் இந்தியானா மாநில ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆளுநர் பதவியில் இருந்தபோது வரிகளில் சலுகைகள் வழங்கச் சட்டம் கொண்டு வந்தார். கருக்கலைப்புச் சட்டம், மத உரிமைகள் சட்டம் ஆகியவற்றை இயற்றினார்.

மேற்கோள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-01-20. பார்க்கப்பட்ட நாள் 2017-08-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்_பென்சு&oldid=3568931" இலிருந்து மீள்விக்கப்பட்டது