மைசூர் மல்லி (நெல்)
மைசூர் மல்லி கருநாடக மாநிலத்தின் பாரம்பரிய நெல் இரகமாக உள்ள இது, தமிழகத்திலும் பரவலாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்நெல் வகை, மன்னர்களுக்கு உணவளிப்பதற்காகவே உற்பத்தி செய்யப்பட்ட ஒன்றாக கூறப்படுகிறது. தமிழக காவிரிக் கழிமுகப் பகுதியில் இருமடங்கு மகசூல் கொடுக்கும் மைசூர் மல்லி, நூறு ஆண்டுகளுக்கு மேலாக சேலம், மற்றும் தருமபுரி மாவட்டங்களில் விவசாயிகள் தொடர்ச்சியாக உற்பத்தி செய்துவருகின்றனர்.[1]
மைசூர் மல்லி |
---|
பேரினம் |
ஒரய்சா |
இனம் |
ஒரய்சா சாட்டிவா |
வகை |
பாரம்பரிய நெல் வகை |
தோற்றம் |
பண்டைய நெல் வகை |
மாநிலம் |
தமிழ் நாடு, கருநாடகம் |
நாடு |
இந்தியா |
மருத்துவ குணம்
தொகுமைசூர் மல்லி மிகுந்த மருத்துவ குணம் கொண்டதாகவும், சத்து மிகுந்ததாகவும் கருதப்படுகிறது. சாதம் வடித்த கஞ்சி, நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாக இருப்பதால், இந்த கஞ்சியை யாரும் வீணாக்குவதில்லை. இதனுடைய பழைய சாதமான நீராகாரம் சுவையும் சத்தும் மிகுந்ததாக இருக்கிறது.[1]
மழலையர்க்கு ஏற்றது
தொகுகுழந்தைகளுக்கு உணவளிக்க ஏற்றதான இந்நெல் இரகம், குழந்தைகளுக்கு எளிதில் சீரணம் ஆவது இந்த இரகத்தின் சிறப்பு. நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருப்பதால், குழந்தைகள் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க உதவுவதாக கூறப்படுகிறது. மேலும் குழந்தைகளுக்கு உணவளிக்கவே பெரும்பாலான நகரவாசிகள் மைசூர் மல்லி அரிசியை விரும்பி வாங்குகிறார்கள்.[1]
மன்னர்கள் மிகவும் விரும்பி சாப்பிட்ட நெல் இரகமாக இருந்தபோதும், சாதாரண குடிமகனும் இந்த இரகத்தை சாப்பிடும் வகையில் தமிழக உழவர்கள் உற்பத்தி செய்து வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.[1]
இவற்றையும் காண்க
தொகுசான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "மைசூர் மல்லி: மன்னர்களுக்கு மட்டுமல்ல- நம் நெல் அறிவோம்". தி இந்து (தமிழ்) - மார்ச் 28, 2015. பார்க்கப்பட்ட நாள் 2016-12-19.