மையக் கிழக்கின் வரலாறு

வரலாற்றுப் பார்வை

இந்த கட்டுரை மையக் கிழக்கின் வரலாறு பற்றிய கண்ணோட்டம் மட்டுமே அளிக்கிறது. மேலும் அறிய ,தனித்தனி நாடுகள் மற்றும் பகுதிகளின் வரலாற்றை பற்றிய கட்டுரைகளை படிக்கவும். இந்த பகுதியை சூழ்ந்துள்ள விடயங்களை பற்றிய விவாதங்களை அறிய, மையக் கிழக்கு கட்டுரையை படிக்கவும்.

பண்டைய மையக் கிழக்கு

தொகு

நாகரீகத்தின் தொட்டில்

தொகு

நாகரீகத்தின் தொட்டில் என்று பெரும்பாலானோரால் கருதப்படும் மையக் கிழக்கில் தான், கிமு 3500 ஆண்டில் மெசபோடேமியாவில் (ஈராக்) சுமேரியர்களால் உலக வரலாற்றின் மிக பழைய நாகரீகம் உருவாக்கப்பட்டது. இந்த பகுதியில் தான் சுமேரியர்கள் ,அற்றும் அக்காடியர்கள் (பிற்பாடு பாபிலோனியர்கள் மற்றும் அஸ்சிரியர்கள் வாழ்ந்து வந்தனர்.

கிமு நான்காம் நூற்றாண்டில், வழிபாடுத் தளங்கள் மிகுந்த பகுதிகள் நகரங்களாக தெற்கு மெசபோடேமியாவில் வளர்ந்து வந்தன. இந்த நகரங்களில் மிகவும் முக்கியமானதாக விளங்கியது சுமர். இந்நகரத்தின் வாயிலாக இப்பகுதிக்கு அதன் மொழி கிடைத்தது மற்றும் மனிதக் குளத்தின் முதன் முதல் நாகரீகம் என பெயரும் கிடைத்தது. கிமு 2340 ஆண்டில் சார்கோன் தி கிரேட் தெற்கின் அனைத்து நகரங்களும் இணைத்து , உலகின் முதல் பேரரசான அக்காடியன் வம்சத்தை உருவாக்கினார்.[1]

சுமேரிய நாகரீகம் ஆரம்பித்த பின்னர், பண்டைய எகிப்தின் நைல் நதி பள்ளத்தாக்கு பகுதிகள் அனைத்தும் கிமு நான்காம் நூற்றாண்டில் பாரோக்கள் தலைமையில் ஒன்றிணைக்கப்பட்டன. நாகரீகம் வேகமாக செழுமை பிறை வாயிலாக மெடிடேர்றேனியன் கடலின் மேற்கு கரை மற்றும் லெவான்ட் முழுவதும் பரவியது. இந்த பகுதியில் எலாமியர்கள், ஹிட்டிடியர்கள், அமோரியர்கள், பீநிசியர்கள், இஸ்ரேலியர்கள் மற்றும் பலர் முக்கிய நாடுகளை உருவாக்கினர்.

அஸ்சிரியன் பேரரசுகள்

தொகு

மையக் கிழக்கு நாடுகளை ஆண்ட பல சக்தி வாய்ந்த பேரரசுகளுக்கு மெசபோடேமியா தான் பிறப்பிடமாக அமைந்தது -- குறிப்பாக கிமு 1365-1076 ஆண்டுகாலத்தில் ஆண்ட அஸ்சிரியன் பேரரசுகள் மற்றும் 911-605 ஆண்டுகாலத்தில் ஆண்ட புதிய அஸ்சிரியன் பேரரசு போன்ற பேரரசுகளுக்கு. தனது ஆட்சி உச்சத்தில் அஸ்சிரியன் பேரரசு தான் உலகின் மிக பெரிய பேரரசாக விளங்கியது.தற்பொழுதைய ஈராக், சிரியா , லெபனான் , இஸ்ரேல , பாலஸ்தீனம், குவைத், ஜோர்டான், எகிப்து , சிப்ரஸ் மற்றும் பஹ்ரைன் போன்ற நாடுகள் மற்றும் ஈரான், துருக்கி, அர்மேனியா, ஜியார்ஜியா, சூடான் மற்றும் அரேபியாவின் பெரும் பகுதிகளை சுற்றி வளைத்து வைத்து இருந்தன அஸ்சிரியன் பேரரசு.

அஸ்சிரியன் பேரரசுகளின் தாக்கம், முக்கியாமாக மூன்றாம் அஸ்சிரியன் பேரரசின் தாக்கம்,மையக் கிழக்கு பகுதியின் மீது மிகவும் நீடித்தது. அஸ்சிரியர்களின் மேலாதிக்கம் முடிவுக்கு வரும் முன்னரே, அப்பொழுதைய உலகிற்கு சிறந்த நாகரீகத்தை கொண்டு சென்றனர். காஸ்பியன் முதல் சிப்ராஸ் வரை, மற்றும் அனடோலிய முதல் எகிப்து வரை வாழ்ந்த நாடோடிகள் மற்றும் காட்டுமிராண்டி சமூகங்களை அஸ்சிரியன் வட்டத்தினுள் கொண்டு வந்து, அவர்களுக்கு நாகரீகம் எனும் வரப்பிரசாதத்தை அளித்த பெருமை அஸ்சிரியன் பேரரசுக்கு விரிவாக்குதலின் மூலம் தான் சேர்ந்தது.[2]

பாரசீக பேரரசுகள்

தொகு

கிமு ஆறாம் நூற்றாண்டு முதல், மையக் கிழக்கு பகுதிகளை பல்வேறு பாரசீக நாடுகள் ஆட்சி செய்தன, மேடேஸ்சில் ஆரம்பித்து, பாரசீகர்கள் அழாத புதிய பாபிலோனியன் பேரரசு, அதன் பின்னர் முதல் பாரசீக பேரரசு என கருதப்படும் அக்கிமேநிடு பேரரசு அங்கு ஆட்சி செய்தன. இந்த பேரரசை தான் நான்காம் நூற்றாண்டின் பிற்பாதியில் அலெக்சாண்டர் தி கிரேட் எனும் மாசீடோனிய பேரரசர் வெற்றி கொண்டார். இதன் பின்னர் மேற்கு ஆசியாவின் ப்டோலமியரின் எகிப்து மற்றும் செளியூசிடு தேசங்கள் ஆட்சிக்கு வந்தன.

ஒரு நூற்றாண்டு இடைவெளிக்கு பின்பு கிமு மூன்றாம் நூற்றாண்டில், பாரசீக பேரரசு எனும் யோசனைக்கு உயிர்ப்பித்தது ஆசிய ஈரானியர்களான பார்த்தியர்கள் -- இதை பின்தொடர்ந்து கிபி மூன்றாம் நூற்றாண்டு முதல் ஆட்சி செய்து வந்த சாசானிடர்கள். இவர்கள் ஆண்ட சமயத்தில், இந்த பேரரசின் பிடியில் ஆசிய கண்டத்தை சேர்ந்த மையக் கிழக்கு இருந்தன மற்றும் இவர்களது தாக்கம் ஆப்ரிக்கா மையக் கிழக்கு பகுதிகளிலும் தென்பட்டன. இந்த தாக்கம் ஏழாம் நூற்றாண்டின் மத்தியில் அரேபியர்களால் நிகழ்த்தப்பட்ட பாரசீகத்தின் மீதான இஸ்லாத்தின் படையெடுப்பு வரை நீடித்தது. கிழக்கத்திய சடங்கு, கிழக்கத்திய தேவாலயம் கொண்ட கிறிஸ்த்துவம் பாரசீக ஆட்சியில்,குறிப்பாக கிபி முதலாம் நூற்றாண்டு முதல் அஸ்சிரியாவில் தொடங்கி, மேலோங்கி இருந்தது. இந்த பகுதி சிரியா-அஸ்சிரியர்கள் இலக்கிய மரபின் மையப் பகுதியாக விளங்கியது.

ரோமானிய பேரரசு

தொகு

கிமு முதலாம் நூற்றாண்டில், பெருகி வந்த ரோமானிய குடியரசு முழு கிழக்கு மெடிட்டரேனியன் பகுதியை தன வசம் கொண்டு வந்தது. ஐரோப்பா மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவை இணைத்து ஒரே அரசியல் மற்றும் பொருளியல் தொகுதியாக மாற்றியது ரோமானிய பேரரசு. இந்த பேரரசின் கீழ வராத பிரதேசங்களும் அதன் தாக்கத்தை உணர்ந்தன. இலத்தீன கலாச்சாரம் இந்த பகுதிகளில் பரவி வந்தாலும், முன் மாசிடோனியா பேரரசு பரப்பிய கிரேக்க மொழி மற்றும் கலாச்சாரம் தான் ரோமானிய காலகட்டங்களிலும் இங்கு கொடிக்கட்டி பறந்தன. மையக் கிழக்கின் நகரங்களில், அலெக்ஸாண்ட்ரியா நகரம், இந்த பேரரசின் முக்கிய நகரமாக திகழ்ந்தது. மற்றும், இந்த பகுதி பேரரசின் உணவு தயாரிக்கும் இடமாக அமைந்தன.

ரோமானிய மற்றும் பாரசீக பேரரசுகளில் பரவிக் கொண்டிருந்த கிறிஸ்த்துவம், மையக் கிழக்கில் வேரூன்றின, மற்றும் அலெக்ஸாண்ட்ரியா , எதேஸ்ஸா போன்ற நகரங்கள் முக்கிய கிறிஸ்த்துவ பயிலகங்கள் ஆயின. கிபி ஐந்தாம் நூற்றாண்டில், மையக் கிழக்கில் மற்ற மதங்களை(மெல்ல சமய மறுப்பு|மறுப்பு]] கிறிஸ்துவ உட்குழுக்கள் உட்பட) அடக்கி வைக்க தொடங்கியது கிறிஸ்த்துவ மதம்.ரோம் நகருடனான மையக் கிழக்கின் உறவு மெல்ல அறுந்து போனது. ரோமானிய பேரரசு கிழக்கு மற்றும் மேற்கு என பிரிந்தது. இதில் மையக் கிழக்கின் உறவுகள் கிழக்கின் புதிய தலைநகரான கான்ஸ்டான்டினோபில்வுடன் அமைந்தது. இதனால், ரோமின் வீழ்ச்சி மற்றும் மேற்கு ரோமானிய பேரரசின் வீழ்ச்சி இந்த மையக் கிழக்கு பகுதிகளை வெகுவாக பாதிக்கவில்லை

மேற்கோள்கள்

தொகு
  1. Lyons, Albert S. "Ancient Civilizations - Mesopotamia". Health Guidance.org. பார்க்கப்பட்ட நாள் 24 August 2013.
  2. BetBasoo, Peter (2007). "Brief History of Assyrians". Assyrian International News Agency. பார்க்கப்பட்ட நாள் 24 August 2013.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மையக்_கிழக்கின்_வரலாறு&oldid=1514510" இலிருந்து மீள்விக்கப்பட்டது