மைலோ (நீராகாரம்)
மைலோ (Milo) என்பது குளிர்ந்த அல்லது சூடான நீரில் அல்லது பாலில் கலக்கி நீராகாரம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் சாக்லேட் மற்றும் மால்ட் (Malt) கலந்த தூள் ஆகும். இது நெஸ்லே நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. இது உலகின் பெரும்பாலான நாடுகளில் புகழ் பெற்ற நீராகாரம் ஆகும். 1934 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்த தாமஸ் மேய்னி (Thomas Mayne) இதைத் தயாரித்தார்.[1] பின்னர் நெஸ்லே நிறுவனம் இதை மேம்படுத்தியது. உலகில் பெரும்பான்மையான நாடுகளில் சந்தைப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
இந்தத் தூளானது பெரும்பாலும் பச்சை நிறப் பெட்டியில் விற்கப்படும். சில நாடுகளில் உட்கொள்ளத் தயாரான நிலையிலும் விற்கப்படும். இவை திடவடிவ வில்லைகளாகவும் சந்தையில் கிடைக்கின்றன. நாடுகளுக்கு நாடு இவற்றின் சேர்மானப் பொருட்களிலும் சுவையிலும் மாறுபாடு உண்டு.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Milo history @ Nestle". Archived from the original on 2014-08-06. பார்க்கப்பட்ட நாள் 2014-08-22.