மை அழிப்பான்
மை அழிப்பான் (ink eraser) என்பது எழுத்து மேற்பரப்புகளில் இருந்து பென்சில் அடையாளங்களைவிடச் சிரமமான மையை நீக்கப் பயன்படும் ஒரு கருவி ஆகும். இரப்பர் பென்சில் அழிப்பானை ஒத்த பழைய வகையான உலோக சீவுளி, எழுத்துத் தளத்தில் உள்ள மையை உராய்வால் நீக்குகிறது.[1] கண்ணாடியிழை அழிப்பான்களும் உராய்வால் வேலை செய்கின்றன. இந்தவகையான அழிப்பான்கள் முழுவதுமாக காகிதத்திலிருந்து மையை நீக்குகின்றன. இங்கு சில தவிர்க்க முடியாத சேதங்கள், பெரும்பாலான காகிதம் மற்றும் மையிற்கு ஏற்படுகின்றன. இங்கு காகிதமானது சில மையை உறிஞ்சிக் கொள்கிறது.
மை அழிப்பானில் உள்ள வேதிப் பொருட்கள் சில மைகளுடன் செயல்புரிந்து அதன் நிறநீக்கத்தை ஏற்படுத்துவதுடன் எழுத்தையும் மறைக்கின்றது.[2]
உலோக மை அழிப்பான்கள்
தொகுஉலோக மை அழிப்பான்கள் இரசாயன மை அழிப்பான்களுக்கு முன்னதாக அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது நிரந்தர எழுதுதலானது மை மூலமாக இருந்தது. அழிப்பான்கள் அடிப்படையில் சிறிய கத்திகளாக காணப்பட்டது. இவை எப்போதாவது ஆயுதங்களாகவும் பயன்படுத்தப்பட்டன.[3][4]
இரசாயன மை அழிப்பான்கள்
தொகுஇரசாயன மை அழிப்பானானது ஜேர்மன் நாட்டு உற்பத்தியாளரான பெலிக்கன் (Pelikan) என்பவரால் 1930 களில் கண்டுபிடிக்கப்பட்டு, 1972ல் டிண்டன்கில்லர் (Tintenkiller-Ink killer) என்ற பெயருடன் ஒரு புதுமையாக அறிமுகப்படுத்தப்பட்டது.[2]
இரசாயன மை அழிப்பான்கள் ரோயல் ஊதா மையினை உடைக்கும்போது மையின் சாய மூலக்கூறுகளின் வடிவியல் பாதிக்கப்படும். அதனால் ஒளி வடிகட்டப்படும். இந்த மூலக்கூறுகள் சாயத்தின் மத்திய கார்பன் அணுக்களைப் பிணைக்கும் சல்பைட் அல்லது ஃஹைட்ராக்ஸைடு அயனிகள் மூலமாக பாதிக்கப்படும்.[5] இந்த அழித்தல் செயல் முறையில் மையானது நீக்கப்படுவதற்குப் பதிலாகக் கண்ணுக்குப் புலப்படாதவகையில் மறைக்கப்படுகிறது. மீண்டும் கண்ணிற்கு புலப்படும் ஆல்டிஹைடுகளாக மாற்றியமைக்கலாம்.
இரசாயன அழிப்பான் ரோயல் நீல மையை அழிப்பதற்கு மட்டுமே தொழிற்படுகிறது. இது கறுப்பு நிறத்தை விரும்பத்தக்கதாக துரு பழுப்பு நிறத்திற்கு மாற்றிவிடும். பிற தரமற்ற நீலசாயங்களின் சாயலையும் மாற்றுகிறது. இதனால் இந்த மை அழிப்பான் ரோயல் நீல மை தவிர்த்த பிற நிற மைகளுக்குப் பயன்படாது.
மேலும் காண்க
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ "Tombow Mono Sand & Rubber Eraser". JetPens.
- ↑ 2.0 2.1 "Ink eradicators". pelikan.com.
- ↑ "Stabbed to Death in Office Frolic," New York Times, February 16, 1909.
- ↑ "Bang Knocked Him Down: How Coles was Provoked to Stab Coachman Flanagan," New York Times, June 26, 1886.
- ↑ "Prof. Blumes Tipp des Monats". chemieunterricht.de.