மொகிந்தர் சிங் கேபி

இந்திய அரசியல்வாதி

மொகிந்தர் சிங் கேபி (Mohinder Singh Kaypee) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் உறுப்பினராக இருந்தார்.

மொகிந்தர் சிங் கேபீ
Mohinder Singh Kaypee
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2009 - 2014
பின்னவர்சந்தோக் சிங் சவுத்ரி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு7 நவம்பர் 1956 (1956-11-07) (அகவை 68)
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
பெற்றோர்தர்சன் சிங் கேபீ

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

மொகிந்தர் சிங் கேபி ஒரு தலித் குடும்பத்தில் தர்சன் சிங் கேபி மற்றும் கரண் கவுர் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவரது தந்தை 1992 ஆம் ஆண்டில் காலிசுதானி போராளிகளால் கொல்லப்பட்டார் [1]

சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் சட்டப் பாடத்தில் பட்டம் பெற்றார்.

அரசியல்

தொகு
  • 2009 ஆம் ஆண்டில் இவர் சலந்தர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினரானார்.[2] ஆனால் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஓசியார்பூர் தொகுதியில் பாரதிய சனதா கட்சி வேட்பாளர் விச்சய் சாம்ப்லாவிடம் தோல்வியடைந்தார்.
  • மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 1992 ஆம் ஆண்டில் விளையாட்டு மற்றும் இளைஞர்களுக்கான மாநில அமைச்சராக இருந்தார்.[3]
  • பஞ்சாப் பிரதேச காங்கிரசு குழுவின் தலைவராகவும் இருந்தார்.[4]
  • பஞ்சாப் மாநில தொழில்நுட்பக் கல்வி மற்றும் தொழில்துறை பயிற்சி வாரியத்தின் தலைவராக இருந்தார்.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. "Is it end of the road for politically powerful Dalit clans of Doaba?" (in ஆங்கிலம்). 2017-03-14. பார்க்கப்பட்ட நாள் 2020-06-02.
  2. "Humble, but encore unlikely". Hindustan Times (in ஆங்கிலம்). 2014-02-14. பார்க்கப்பட்ட நாள் 2020-06-02.
  3. "Members : Lok Sabha". 164.100.47.194. பார்க்கப்பட்ட நாள் 2020-06-02.
  4. Service, Tribune News. "Chaudhary tries to pacify ex-MP Kaypee". Tribuneindia News Service (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-02.[தொடர்பிழந்த இணைப்பு]
  5. Service, Tribune News. "Once Tech Edu Minister, Kaypee settles for chairman of its board". Tribuneindia News Service (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மொகிந்தர்_சிங்_கேபி&oldid=4108839" இலிருந்து மீள்விக்கப்பட்டது