மொக்குவா கிணறு

மொக்குவா கிணறு (Moqua Well) என்பது நவூரு தீவில் உள்ள ஒரு சிறிய நிலத்தடி ஏரி ஆகும். இது யாரென் நகரின் அடியில் அமைந்துள்ளது. நவூருவில் உள்ள மிகச்சில சுற்றுலாத் தலங்களுள் இதுவும் ஒன்றாகும்.

மொக்குவா கிணறு
Moqua Well
அமைவிடம்யாரென்
ஆள்கூறுகள்0°33′S 166°55′E / 0.550°S 166.917°E / -0.550; 166.917
வகைநிலத்தடி ஏரி
வடிநில நாடுகள்நவூரு
மேற்பரப்பளவு2,000 m2 (0.49 ஏக்கர்கள்)
சராசரி ஆழம்2.5 மீ
அதிகபட்ச ஆழம்5 மீ
கடல்மட்டத்திலிருந்து உயரம்5 மீ

வரலாறு

தொகு

இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் நவூரு நாட்டவர்களுக்கு குடிநீருக்காக இருந்த ஒரேயொரு முதன்மை ஆதாரமாக இருந்தது.[1] இதனாலேயே இவ்வேரி கிணறு என்று அழைக்கப்படுகிறது.[2] யாரென் மாவட்டம் முன்னர் மொக்குவா அல்லது மக்குவா என அழைக்கப்பட்டு வந்தது. இதன் காரணமாகவே இக்கிணறும் அதே பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது. இக்கிணற்றுக்கு அருகில் மொக்குவா குகைகள் அமைந்துள்ளன.

2001 ஆம் ஆண்டில் இங்கு இடம்பெற்ற ஒரு தற்கொலை நிகழ்வை அடுத்து நவூரு அரசு இவ்வேரிக்கு தடுப்பு வேலி போட்டுள்ளது.[1][2]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Moqua Caves and Moqua Well", Gatis Pāvils, 30 October 2011.
  2. 2.0 2.1 "Nauru - Attractions", iExplore.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மொக்குவா_கிணறு&oldid=1939984" இலிருந்து மீள்விக்கப்பட்டது