மொக்கை ஓடை அருவி

Gengavaram Falls (மொக்கை ஓடை அருவி) இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் விழுப்புரம் மாவட்டத்தில், செஞ்சி அருகில் கெங்கவரம் எனும் ஊரில் அமைந்துள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரே ஓர் அருவி இந்த மொக்கை ஓடை அருவி தான்.

போக்குவரத்து வசதி தொகு

செஞ்சியில் இருந்து பேருந்து வசதி உள்ளது. கெங்கவரம் ஏரிக்கரை பேருந்து நிறுத்தத்தில் இறங்கி ஓர் 800 மீட்டர் உள்ளே நடந்து சென்றால், மொக்கை ஓடை அருவிகள் உள்ள இடத்திற்கு செல்லலாம்.

வழித்தடம் தொகு

இந்த அருவி, முதலில் பாக்கமலையில் (குளிர்சுனை ஓடை, மானிப்பாயை போன்ற இடங்களில்) உருவாகி பின்னர் பல கற்குவியல் (நாவாடை) பாறை இடுக்குகளில், மலைகளுக்கு இடையே வந்து, அடிமொக்கை என்ற ஒரு இடத்தை வந்து சேருகிறது. பின்னர் காடுகளுக்கிடையில் தோராயமாக 2 அல்லது 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு காட்டின் நடுவே மொக்கை ஓடை வருகிறது, பின்னர் பல்லாடேசன் (இங்கு பல மூங்கில் தோப்புகள் உள்ளது) என்ற இடத்தில் இருந்து ஒரே ஓடையில் பல சிற்றருவியாக மாறி, அடிவாரத்தை சென்றடைந்து, கெங்கவரம் ஏரி, தாண்டவசமுத்திரம் ஏரி போன்ற பல ஏரிகள் நிரம்பி வழிந்து பனைமலைப் பேட்டை ஏரி நிரம்பி கடைசியில் கடலில் கலக்கிறது.

பெயர்க் காரணம் தொகு

இந்த ஓடையின் அருகே மொக்கை என்று ஒரு மிகப்பெரிய பாறை உள்ளது, இதன் அருகே இவ்வருவி ஓடுகிறது. இவ்வருவி உள்ள ஊர் கங்கையின் வரம் கொண்ட ஊர் எக்காலத்திலும் முப்போகம் விளைச்சல் விளையும் ஊர் என்பதால் கெங்கையின் வரம் கொண்ட ஊர் என அழைக்கப்பட்டு, பிற்காலத்தில் கங்கைவரம் - கங்காவரம் என மருவி தற்போது கெங்கவரம் என பெயர் பெற்றுள்ளது.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மொக்கை_ஓடை_அருவி&oldid=3629429" இருந்து மீள்விக்கப்பட்டது