மொட்ட முனிசுவரன்
மொட்ட முனிசுவரன் என்பவர் தமிழ்நாட்டில் மதுரையில் உள்ள மீனாட்சியம்மன் கோயிலின் வடக்கு கோபுரத்தில் உள்ள முனிசுவரனாகும். மீனாட்சியம்மன் கோயிலின் பிற கோபுரங்களில் உள்ளதைப் போல் சிற்பங்களின்றி இக்கோபுரம் கட்டப்பட்டதால், இதனை மொட்டை கோபுரம் என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது. இம்மொட்டை கோபுரத்தடியில் குடிகொண்ட முனிசுவரனை, மொட்ட முனி , மொட்ட கோபுரத்தான் எனப் பல பெயர்களால் அழைத்துவருகின்றனர்.[1]
தொன்மம்
தொகுமுனிசுவரன் மொட்ட கோபுரத்தில் தங்கியமைக்காக சொல்லப்படுகின்ற தொன்மமானது, முனிசுவரன் என்பவர் சிவபெருமானின் கணங்களில் ஒருவர். அவர் சிவபெருமான் மற்றும் மீனாட்சியின் திருமணத்தினைக் காணவந்தார். திருமணம் முடிந்ததும் சிவபெருமானிடம் விடைபெற்று கயிலை திரும்ப வினவிய போது, சிவபெருமான் மீனாட்சி கோயிலின் மொட்டைக் கோபுரத்தில் தங்கும்படி கூறியதாகவும், அதனால் முனிசுவரன் இங்கேயே தங்கிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. [2]
வழிபாடு
தொகுமொட்ட முனியை மதுரையில் உள்ள மக்கள் வழிபட்டு வருகிறார்கள். அவர்களின் குழந்தைகள் எந்தக் காரணமும் இல்லாமல் அழுதால், அக்குழந்தையை முனிசுவரன் கோயிலுக்கு அழைத்துவந்து விபூதி கொடுக்கின்றார்கள்.
ஆதாரங்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-01-23. பார்க்கப்பட்ட நாள் 2016-10-15.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-01-23. பார்க்கப்பட்ட நாள் 2016-10-15.