மொழியியல் திறனாய்வு

மொழியியல் திறனாய்வு என்பது, இலக்கியத் திறனாய்வை மொழியியல் வழியில் அணுகும் ஒரு திறனாய்வு முறை ஆகும்[1] இலக்கியம் மொழியால் ஆனது. இதனால், மொழி இலக்கியத்தின் பல்வேறு சிறப்பியல்புகளுக்கு அடிப்படையாக அமைகின்றது என்னும் கருதுகோளின் அடிப்படையிலேயே மொழியியல் திறனாய்வு இலக்கியத்தை அணுகுகின்றது. மொழி ஒரு தொடர்பாடல் கருவியாக இருப்பதற்கு உரிய பல்வேறு அம்சங்களை மொழியியல் ஆராய்கிறது. இதனால், மொழியியலின் பல்வேறு கோட்பாடுகள் இலக்கியத்தைத் திறனாய்வு செய்வதற்குப் பெரிதும் உதவியாக உள்ளன.

குறிப்புக்கள்

தொகு
  1. நடராசன், தி. சு., 2009. பக். 105.

உசாத்துணைகள்

தொகு
  • பஞ்சாங்கம், க., இலக்கியமும் திறனாய்வுக் கோட்பாடுகளும், அன்னம், தஞ்சாவூர், 2011.
  • நடராசன், தி. சு., திறனாய்வுக் கலை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, 2009 (ஏழாம் பதிப்பு).

இவற்றையும் பார்க்கவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மொழியியல்_திறனாய்வு&oldid=1561741" இலிருந்து மீள்விக்கப்பட்டது