மொழி ஆவணப்படுத்தல்
மொழி ஆவணப்படுத்தல் அல்லது ஆவண மொழியியல் அல்லது மொழி ஆவணவியல் என்பது மொழியியல் துறையின் ஒரு பிரிவு ஆகும். ஒரு மொழியை, அதுசார் உள்ளடக்கத்தை, சூழமைவுகளை, அறிவுகளை இத் துறை ஆவணப்படுத்துகிறது. ஒரு மொழியை ஆவணப்படுத்தல் அது பற்றிய ஆய்வுக்கும் உதவுவதோடு, அழிவு நிலையில் உள்ள மொழிகளுக்கு புத்துயிர்ப்புக் குடுக்கவும் உதவுகிறது.