மொழி நூல் (நூல்)

மொழி நூல் என்பது, தமிழில் மொழியியல் தொடர்பாக வெளிவந்த ஒரு நூல். மு. வரதராசன் எழுதிய இந்த நூலின் முதற் பதிப்பு சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினரால் 1947ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

நூல் வரலாறும் நோக்கமும்

தொகு

சென்னைப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் பாடத்திட்டத்தின் அடிப்படையில் பச்சையப்பன் கல்லூரியில் பி. ஓ. எல். ஆனர்ஸ் வகுப்புக்கு நூலாசிரியர் மொழிநூல் பாடம் கற்பித்துள்ளார். இக்காலத்திலேயே மொழி நூல் குறித்து ஒரு நூல் எழுதும் எண்ணம் எழுந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது முதல் அணி மாணவர்கள் சிலரது தூண்டுதலால், அவர்கள் தனது விரிவுரையின்போது எடுத்த குறிப்புக்களைப் பயன்படுத்தியே இந்நூல் எழுதப்பட்டதாகவும் தெரிகிறது.[1] தமிழ் மக்கள் மத்தியில் மொழியியல் தொடர்பான ஆர்வத்தை ஏற்படுத்துவதும், அதன் மூலம், தமிழ் மொழியின் சிறப்பையும், தமிழ்ச் சான்றோரின் பெருமையையும் உணர வைப்பதுமே நூலாசிரியரின் நோக்கமாக இருந்துள்ளது.

உள்ளடக்கம்

தொகு

நூல் 17 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளின் தலைப்புக்கள் பின்வருமாறு:[2]

  1. ஒலிவகை
  2. உயிரொலிகள்
  3. மெய்யெழுத்துக்கள்
  4. ஒலியளவு
  5. ஒலியழுத்தம்
  6. ஒலியசை முறை
  7. சொல்லின் திரிபு
  8. அடிச்சொற்கள்
  9. பெயர்ச்சொல்
  10. வேற்றுமை
  11. மூவிடப்பெயர்
  12. எண்ணுப் பெயர்கள்
  13. வினைச் சொல்
  14. வினைவகை
  15. சுட்டு முதலியன
  16. சொல்லும் பொருளும்
  17. சொற்றொடர்

குறிப்புக்கள்

தொகு
  1. வரதராசன், மு., 2007. பக். 18.
  2. வரதராசன், மு., 2007. பக். 23-26.

உசாத்துணைகள்

தொகு
  • வரதராசன், மு., மொழி நூல், பாரி நிலையம், சென்னை, 2007.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மொழி_நூல்_(நூல்)&oldid=3712709" இலிருந்து மீள்விக்கப்பட்டது