மோகன் குமார் மங்கலம் விளையாட்டரங்கம்
மோகன் குமார் மங்கலம் விளையாட்டரங்கம் (Mohan Kumar Mangalam Stadium) இந்தியாவின் சார்கண்டு மாநிலத்திலுள்ள பொக்காரோ எஃகு நகரில் அமைந்துள்ளது.[1][2] அரங்கம் நகரத்தின் மையப்பகுதியிலுள்ள பிரிவு 4 பகுதியில் அமைந்துள்ளது. இந்த அரங்கத்தை பொகாரோ எஃகு தொழிற்சாலை நிர்வகிக்கிறது நகரத்தில் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளையும் இத்தொழிற்சாலை நடத்துகிறது. முக்கிய பிரமுகர்களுக்கான இருக்கை வசதிகளுடன் விளையாட்டு அரங்கில் 30,000 நபர்கள் அமர்ந்து பார்க்கும் வசதி இங்கு செய்யப்பட்டுள்ளது. தேசிய மற்றும் மாநில கால்பந்து கூட்டமைப்பு போட்டிகள் இங்கு நடைபெறுகின்றன. தடகள போட்டிகள் நடத்துவதற்கான தடங்களும் இங்குள்ளன. சார்கண்டு கால்பந்து கழகம் 1-கூட்டிணைவு 2 ஆம் நிலை தொழில்முறை கால்பந்து போட்டிகளை இங்கு நடத்தி வருகிறது.
அரங்கத் தகவல் | |||
---|---|---|---|
அமைவிடம் | பொக்காரோ எஃகு நகரம் | ||
ஆள்கூறுகள் | 23°40′3″N 86°9′23″E / 23.66750°N 86.15639°E | ||
இருக்கைகள் | 30,000 | ||
உரிமையாளர் | பொக்காரோ எஃகு தொழிற்சாலை | ||
இயக்குநர் | பொக்காரோ எஃகு தொழிற்சாலை | ||
முடிவுகளின் பெயர்கள் | |||
n/a | |||
அணித் தகவல் | |||
| |||
பிப்ரவரி 2013 இல் உள்ள தரவு |
இந்திய எஃகு ஆணைய கால்பந்து அகாதமியின் தலைமையிடம் மோகன் குமார் மங்கலம் விளையாட்டரங்கமாகும். இந்த அகாதமியின் மாணவர்கள் அணி மூன்று சுப்ராட்டோ கோப்பைகளை வென்றுள்ளார்கள்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Bokaro Attractions | Bokaro Place of interest". Travel.sulekha.com. 2011-08-12. Archived from the original on 11 January 2016. பார்க்கப்பட்ட நாள் 4 February 2013.
- ↑ "Mohan Kumar Mangalam Stadium , Bokaro". Archived from the original on 18 நவம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 4 February 2013.
- ↑ Soccer camp to sieve future Messis