மோகைட்டு

சல்பைடு கனிமம்

மோகைட்டு (Mohite) என்பது தாமிரவெள்ளீயம் சல்பைடு கனிமமாகும். இக்கனிமத்தின் மூலக்கூற்று வாய்ப்பாடு Cu2SnS3 ஆகும். பச்சை கலந்த சாம்பல் நிறத்தில் சாம்பல் நிற கோடுகளுடன் இது காணப்படுகிறது. மோகைட்டு ஒளிபுகா தன்மையையும் உலோக பளபளப்பையும் கொண்டுள்ளது. 4.86 என்ற குறிப்பிட்ட ஈர்ப்பு விசையைக் கொண்டுள்ள மோகைட்டு மோவின் அளவுகோலில் கடினத்தன்மையாக 4 என மதிப்பிடப்பட்டுள்ளது.

மோகைட்டு
Mohite
பொதுவானாவை
வகைசல்பைடு கனிமம்
வேதி வாய்பாடுCu2SnS3
இனங்காணல்
நிறம்சாம்பலும் பசுமையும் கலந்த நிறம்
படிக இயல்புநுண் மணிகள்
படிக அமைப்புஒற்றைச்சாய்வு
மோவின் அளவுகோல் வலிமை4
மிளிர்வுஉலோகத்தன்மை
கீற்றுவண்ணம்சாம்பல்
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகாது
ஒப்படர்த்தி4.86 (கணக்கிடப்பட்டது)
மேற்கோள்கள்[1][2][3]

கிழக்கு உசுபெகித்தானின் சட்கல்-குராமின் மலைகளில் மோகைட்டு கனிமம் முதன்முதலில் 1982 ஆம் ஆண்டில் விவரிக்கப்பட்டது.[2] 1929 முதல் 1993 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் வாழ்ந்த எய்டெல்பெர்க்கு பல்கலைக்கழகத்தின் குண்டர் அரால்டு மோக்கு நினைவாக கனிமத்திற்கு மோகைட்டு என பெயரிடப்பட்டது. நீர்வெப்ப தோற்றம் கொண்ட இக்கனிமம் உசுபெகித்தானின் டெட்ராகெட்ரைட்டு, பாமாடினைட்டு, குராமைட்டு, மவ்சோனைட்டு மற்றும் எம்ப்ளெக்டைட்டு ஆகிய கனிமங்களுடன் தொடர்பு கொண்டுள்ளது. எசுப்பானியாவின் சலமன்கா மாகாணம், அர்கெந்தீனாவின் சால்டா மாகாணத்தின் ஆர்கனுல்லோ சுரங்க மாவட்டம், இலிங்கன் மாகாணத்தின் டெலமர் மலைகள், நெவாடா ஆகிய இடங்களில் மோகைட்டு கிடைக்கிறது.[1][2]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மோகைட்டு&oldid=3611953" இலிருந்து மீள்விக்கப்பட்டது