மோசஸ் நடவடிக்கை

மோசஸ் நடவடிக்கை (Operation Moses (எபிரேயம்: מִבְצָע מֹשֶׁה‎), 1983-85களில் எத்தியோப்பியாவில் ஏற்பட்ட கடும் வறட்சி மற்றும் பசி, பட்டினி[1] மற்றும் 1984ல் துவங்கிய இரண்டாம் சூடான் உள்நாட்டுப் போர்[2]காரணமாக எத்தியோப்பியா நாட்டில் வாழ்ந்த யூதர்கள்[3] அண்டை நாடான சூடானின் அகதிகள் முகாம்களில் வாழ்ந்தனர். அலியா இயக்கம் வாயிலாக 8,000 எத்தியோப்பிய யூதர்கள் இஸ்ரேல் வான்படை வானூர்திகள் மூலம் இஸ்ரேல் நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.[4]

வரலாறு

தொகு

விவிலிய நபரான மோசஸ் பெயரிலான இந்நடவடிக்கை, இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள், சூடான் பாதுகாப்புப் படைகள் மற்றும் கர்த்தூம் நகரத்தில் உள்ள ஐக்கிய அமெரிக்காவின் தூதரகத்தாலும் மேற்கொள்ளப்பட்டது.[5]இந்நடவடிக்கைக்கு சூடானிய முஸ்லீம்கள் மற்றும் காவல்துறையினர் உதவினர்.[6]மேலும் இந்நடவடிக்கைக்கு அமெரிக்காவும், மொசாத் உளவு அமைப்பும் உதவின.[7]

21 நவம்பர் 1984 முதல் 5 சனவரி 1985 வரை 8,000 எத்தியோப்பிய யூதர்களை ஐரோப்பிய வானூர்திகள், கர்த்தூம் நகரத்திலிருந்து பிரஸ்சல்ஸ் நகரம் வழியாக இசுரேலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.[8]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1983–1985 famine in Ethiopia
  2. Second Sudanese Civil War
  3. "Operation Moses". Historyofwar.org. பார்க்கப்பட்ட நாள் 2013-08-31.
  4. Lenhoff, Howard (2007). Black Jews, Jews, and Other Heroes: How Grassroots Activism Led to the Rescue of the Ethiopian Jews. Gefen Publishing House. p. 263. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9652293657.
  5. "Aliyah through Sudan". Archived from the original on December 6, 2010.
  6. Lenhoff, Howard (2007). Black Jews, Jews, and Other Heroes: How Grassroots Activism Led to the Rescue of the Ethiopian Jews. Gefen Publishing House. p. 214. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9652293657.
  7. Rapoport, Louis (1986). Redemption Song. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780151761203. பார்க்கப்பட்ட நாள் 24 May 2016.
  8. Omer-Man, Michael. "This week in History: Operation Moses begins". The Jerusalem Post | Jpost.com (The Jerusalem Post). http://www.jpost.com/Features/InThespotlight/Article.aspx?id=195989. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோசஸ்_நடவடிக்கை&oldid=3678203" இலிருந்து மீள்விக்கப்பட்டது