மோடி விளையாட்டு

மோடி விளையாட்டு [1] கரணம் போடும் போட்டி விளையாட்டு. கரணம் உருளும் கரணமாகவோ, கை உன்றிப் போடும் கரணமாகவோ இருக்கும். மதுரை மாவட்டத்தில் தேவாங்குச் செட்டியார் வகுப்புப் பெரியவர்கள் பொங்கலுக்கு மறுநாள் இதனை விளையாடுவர்.இன்றளவும் ஈரோடு மாவட்டம் நம்பியூர் வட்டம் காவிலிபாளையம் கிராமத்தில் மாட்டு பொங்கலன்று இளைஞர்களால் மோடி எடுத்தல் விளையாடப்பட்டு வருகிறது.

ஆடும் முறை

தொகு

இரண்டு பேர் இரண்டு பக்கம் நிற்பர். ஒருவர் நீறு போடும் பூசாரி. மற்றொருவர் கரணம் போட்டுக்கொண்டு சென்று பொருள்களை எடுத்துவருபவர்.

எடுத்துவருபவர் பக்கத்திலிருந்து அவர்களுக்கு இடையில் கரகம், வாழைத்தண்டு, ஆட்டுக்கால், வாழைப்பழம், முட்டை, உலக்கை, தேங்காய் என்று ஏழு பொருள்கள் வைக்கப்பட்டிருக்கும். கரணம் போட்டுக்கொண்டு சென்று ஒவ்வொரு பொருளாக எடுத்துவந்து தன் இடத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். இதுதான் விளையாட்டு.

கரணம் போட்டுக்கொண்டு செல்லும்போது பூசாரி நீறு தூவுவார். கரணம் போடும் வேகத்தில் நீறு தன் மேல் படாவண்ணம் சென்று பொருள்களை எடுத்துவர வேண்டும். நீறு பட்டுவிட்டால் ஆட்டம் அடுத்தவர் கைக்கு மாறும்.

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்

தொகு
  1. இரா.பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, 1980
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோடி_விளையாட்டு&oldid=2637662" இலிருந்து மீள்விக்கப்பட்டது