மோதல் (Collision ) இரு பொருட்கள் மோதும் போது அவைகளுக்கிடையே ஆற்றல் பரிமாற்றம் நிகழ்கிறது. இந்நிலையில் அதிக ஆற்றல் கொண்ட பொருள் ,மோதல் காரணமாக தன் ஆற்றலின் ஒரு பகுதியினை மற்ற பொருளுடன் பகிர்ந்து கொள்கிறது. எனவே மோதும் இரு பொருட்களும் தமது முந்தைய திசைவேகம் மாறப்பெற்று ,புதிய திசைவேகத்தினைப் பெறுகின்றன.இயற்பியல் விதிகளின் துணையுடன் மோதலுக்குப்பின் அவைகளின் ஆற்றல், திசைவேகம்,திசை முதலியவற்றைக் கணக்கிட முடியும்.[1][2][3]

மோதல் இரு வகைப்படும்.1) மீட்சிமோதல்.(Elastic collision. 2)'மீட்சியிலா மோதல்.(Inelastic collision)

மீட்சிமோதலின் போது இயக்க ஆற்றலில் இழப்பு ஏற்படாமல்,ஆற்றல் பரிமாற்றம் மட்டுமே ஏற்படுகிறது. இதில் மோதலுக்கு முன்னும் பின்னும் மொத்த இயக்க ஆற்றல் சமமாக இருக்கும்.பில்லியார்டு பந்து மோதலினை எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

மீட்சியிலா மோதலில் இவ்வாற்றல் சமமாக இருக்காது. ஆற்றலின் ஒருபகுதி வெப்பமாகவோ வேறு வழியிலோ இழக்கப் பட்டிருக்கும். இந்நிகழ்வுகள் பொதுவாக மோதல்கள் எனப்படுகின்றன.

அணுவைப்பற்றி--பம்பாய் தமிழ்ச் சங்கம்.

மேற்கோள்கள்

தொகு
  1. Schmidt, Paul W. (2019). "Collision (physics)" (in en). Access Science. doi:10.1036/1097-8542.149000. https://www.accessscience.com/content/collision-physics/149000. 
  2. Alciatore, David G. (January 2006). "TP 3.1 90° rule" (PDF). Archived (PDF) from the original on 2022-10-09. பார்க்கப்பட்ட நாள் 2008-03-08.
  3. Air Force Institute of Technology (1991). Critical technologies for national defense. AIAA. p. 287. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-56347-009-8.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோதல்&oldid=4102390" இலிருந்து மீள்விக்கப்பட்டது