மோதிரம் வைத்தல்

சிறுவர் சிறுமியர் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்று மோதிரம் வைத்தல்.

ஆடும் முறை தொகு

இரண்டு அணிகள் இருக்கும். எதிரணியைப் பார்த்துக்கொண்டு இரண்டு வரிசையாக உட்காருவர். அணித்தலைவர் அவரவர் அணியில் ஒருவருக்குப் பின்னால் மோதிரத்தை வைக்கவேண்டும். எதிரணியில் ஒருவர் யாருக்குப் பின்னால் மோதிரம் உள்ளது என்று சொல்லவேண்டும்.

சொல்லிவிட்டால் சொன்ன அணிக்கு ஒரு பழம். சொன்னது தவறாயின் மோதிரம் வைத்த அணிக்கு ஒரு பழம். மோதிரம் வைக்கும் முறைமை அணிகளுக்கிடையே மாறி மாறி வரும். அதிக பழம் பெற்ற அணிக்கு வெற்றி.

இவற்றையும் பார்க்க தொகு

கருவிநூல் தொகு

  • ஞா. தேவநேயப் பாவாணர், தமிழ்நாட்டு விளையாட்டுக்கள், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1954
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோதிரம்_வைத்தல்&oldid=1020900" இலிருந்து மீள்விக்கப்பட்டது