மோதிராம் கங்கலி

மோதிராம் கங்கலி (Motiram Kangale) கோண்டி மொழி, கோண்ட் இன மக்களின் வரலாறு நாகரிகம், பண்பாடு ஆகியவற்றை ஆராய்ச்சி செய்து வருபவர்.

வரலாறு தொகு

மோதிராம் கங்கலி நாக்பூரைச் சேர்ந்தவர். வேளாண் குடும்பத்தில் பிறந்தவர். சமூகவியல், பொருளியல், மொழியியல் ஆகியப் பாடங்களைப் படித்தார். படிக்கும்போதே அவர் சார்ந்த கோண்ட் மக்களின் மொழியின் மீதும் மக்கள் மீதும் பற்றுக் கொண்டதால் மாணவர் இயக்கத்தில் இணைந்தார். 1973 இல் மும்பையில் ஓ. என். ஜி. சி. என்னும் குழுமத்தில் வேலையில் சேர்ந்தார். பின்னர் ரிசர்வ் பாங்கில் சேர்ந்து 30 ஆண்டுகள் பணிக்குப் பின் 2009 இல் ஒய்வு பெற்றார்

ஆய்வுப்பணி தொகு

மோதிராம் கங்கலி கோண்ட் இன மக்கள் வாழ்கிற இடங்களுக்குச் சென்று கோண்ட் இன மக்களின் தொன்மை வரலாறு, மொழி, நாகரிகம், பண்பாடு ஆகியவற்றை ஆராய்ந்தார். கள ஆய்வுகள் மேற்கொண்டார். அவை தொடர்பான கட்டுரைகள், நூல்கள் எழுதி வெளியிட்டார். கோண்டி மொழிக்குப் பிற மொழிகளில் அகர முதலிகள் வெளியிட்டார். கோண்டி மொழி இலக்கணத்தை முறைப்படுத்திச் சீர்படுத்துவதில் முனைந்தார். அரப்பா கண்டெடுப்பில் வரி வடிவ எழுத்துகளில் கோண்டி மொழியைக் கண்டறிந்தார். 'கோண்டி புனம்தர்சன்' என்னும் நூலில் கோண்ட்வானா என்னும் பகுதியின் நாகரிகப் பண்பாட்டு வரலாற்றுச் செய்திகளை எழுதினார்.

ஆய்வின் முடிவுகள் தொகு

கோண்ட் இன மக்கள் மத்திய இந்தியாவில் பரந்துபட்டு வாழ்கிறார்கள். அவர்கள் மலை வாழ் மக்களாக மராட்டியம், மத்தியப் பிரதேசம், சட்டிசுகர், ஒரிசா போன்ற மாநிலங்களில் மலைப் பகுதிகளில் வாழ்கிறார்கள் அவர்கள் பேசுகிற கோண்டி மொழிக்கு எழுத்து வரிவடிவம் இல்லை. அம்மக்கள் தாய் மொழியில் கல்வி கற்பதில்லை. அதனால் கோண்டி மக்கள் முன்னேற்றம் இல்லாமல் பின்தங்கி உள்ளார்கள்.

இராவணன் கொடியவன் அல்லது தீயவன் என்பது பெரும்பாலான இந்திய மக்களின் கருத்தாக இருக்கும் நிலையில் தொன்று தொட்டு இராவணனைக் கடவுளாக வணங்கித் தொழுகிறார்கள் கோண்ட் இன மக்கள். மத்திய இந்தியாவில் பல பகுதிகளில் இராவணனைக் கடவுளாக மதித்து வணங்கி வருகிறார்கள். அதிலும் சிறப்பாகக் கோண்ட் மக்கள் இராவணனைத் தெய்வம் என்று கருதி தொழுகிறார்கள். எனவே மோதிராம் கங்கலி என்னும் தம் பெயரை மோதி ராவண் கங்கலி என மாற்றி அமைத்துக் கொண்டார்.

உசாத்துணை தொகு

http://www.thehindu.com/news/national/other-states/on-the-margins-championing-gond-culture/article7686156.ece

http://www.outlookindia.com/article/asuras-no-just-indians/291677

"https://ta.wikipedia.org/w/index.php?title=மோதிராம்_கங்கலி&oldid=2711834" இலிருந்து மீள்விக்கப்பட்டது