மோனிஷா பெஹல்

மோனிஷா பெஹல் ஒரு இந்திய பெண்களின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக போராடி வரும் ஒரு சமூக மேம்பாட்டு ஆர்வலராவார், இவர் அஸ்ஸாம், நாகலாந்து போன்ற கிழக்கு இந்தியாவில் உள்ள மாநிலங்களில் பெண்களுக்கு சம அதிகாரம் அளிக்கவும், மாநில அரசின் அதிகார அமைப்புகளில் பெண்களின் பங்களிப்பை உறுதிப்படுத்தவும் பணியாற்றி வருகிறார். இதற்காகவே வடகிழக்கு கூட்டமைப்பு என்ற ஒரு அமைப்பை நிறுவி அதன் மூலம் வடகிழக்கு இந்தியாவில் உள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புற பெண்களின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி தொடர்பான பிரச்சனைகளில் உரிமைகளுக்காக இயங்கி வருகிறார். [1]

மோனிஷா பெஹல்
பிறப்புஇந்தியா
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்முனைவர்.மோனிஷா பெஹல்
அமைப்பு(கள்)https://northeastnetwork.org/

மோனிஷா, இந்தியாவின் வடகிழக்கு கிராமப்புறங்களில் விரிவாகப் பயணம் செய்து, அங்கே காணப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான  பிரச்சினைகளை முன்னிலைப்படுத்த ஆய்வுகள், பேச்சுக்கள், விவாதங்களை நடத்துவதோடு அவைகளைப் பற்றி பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.அந்த  பிராந்தியத்திற்குள் இருக்கும் பெண்களின் கல்வி, சுகாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவைகளை மேம்படுத்துவது குறித்த பல திட்டங்களைத் தொடங்கியுள்ளார். அவற்றில் ஒன்றான வடகிழக்கு கூட்டமைப்பு அமைப்பு நாகாலாந்தில் குறிப்பிடத்தக்க சமூக அடிப்படையிலான முயற்சியாக வளர்ந்துள்ளது.

வடகிழக்கு கூட்டமைப்பு (என் இ என்) தொகு

மோனிஷா பெஹலால், 1995 ம் ஆண்டு பெண் தொழிலாளர்களுக்கு, ஆண்களுக்கு நிகரான சம்பளம், சுற்றுச்சூழல் ரீதியாக பொறுப்பான நடைமுறைகள், பெண்களின் சுகாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் சிறந்த விவசாய நடைமுறைகள் போன்ற பல்வேறு வளர்ச்சி இலக்குகளை முதன்மையாகக் கொண்டு செயல்பட்டு வரும் வடகிழக்கு கூட்டமைப்பு என்ற அமைப்பு,  நாகலாந்தின் பெக் மாவட்டத்தில் உள்ள சிசாமி என்ற சிறிய கிராமத்தில் தொடங்கப்பட்டது ,[2] இந்த அமைப்பிற்கு தற்போது வரை தலைமை நிர்வாக அதிகாரியாகவும்  உள்ளார்,

சிசாமி நெசவாளர்கள் தொகு

நாகலாந்தின் தனித்துவமான நெசவு பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கும் அதன்மூலம் பெண்களுக்கு  பரவலாக்கப்பட்ட அதன் வாழ்வாதார திட்டமான சிசாமி நெசவினைக் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். சிசாமி  கிராமத்தில் ஏழு நெசவாளர்களுடன் தொடங்கிய இந்த திட்டம், தற்போது சிசாமியில் மட்டுமல்லாது,  பெக் மாவட்டத்தில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் முன்னூறுக்கும் மேற்பட்ட நெசவு செய்யும் பெண்களின் வலுவான வலையமைப்பை தன்னகத்தே கொண்டுள்ளது.[3]

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மோனிஷா_பெஹல்&oldid=3702300" இலிருந்து மீள்விக்கப்பட்டது