மோனோகார்பிக்

மோனோகார்பிக் (Monocarpic) தாவரங்கள் என்பவை தம் வாழ்காலத்தில் ஒரே ஒருமுறை மட்டும் பூத்து, காய்த்து, கனிகொடுத்து மடியும் தாவரங்கள் ஆகும். இச் சொல் அல்போன்சு டி கான்டில் என்பவரால் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. இதே பொருளுள்ள பிற சொற்கள் கபாசன்த், செமல்பாரசு (semelparous) ஆகும். இச்சொல்லுக்கு எதிரான சொல் பாலிகார்பிக் (Polycarpic) ஆகும். பாலிகார்பிக் தாவரங்கள் என்பவை தம் வாழ்காலத்தில் பலமுறை பூத்து, காய்த்து, கனி கொடுத்து மடிபவை ஆகும்.

பிலிடெசியல்சு (Plietesials) எனப்படும் தாவரங்களும் மோனோகார்பிக் தாவரங்கள் போன்றே ஒருமுறை பூத்து மடிகின்றன. கேரளாவின் மூணாறு பகுதியில் காணப்படும் நீலக்குறிஞ்சியும் பிலிடெசியல்சு தாவரங்களே.

தாவரங்கள் பூக்களைக் கொடுக்கும் முன் பல்லாண்டு காலம் வாழ்கின்றன. பூத்தலுக்குப் பின் கனி உருவாதல், விதை உருவாதல் எனப் பல மாற்றங்களுக்குப் பின் மடிகின்றன. இவை அனைத்தும் நடைபெற கார்மோன்கள் எனப்படும் வேதிப்பொருளே காரணமாகும்.

அகாவாசியே, அரெகேசியே, புரமோலிசியே, மூசேசியே, அகன்தசியே, அபோசைனெசியே போன்றவை மோனோகார்பிக் வகையைச் சார்ந்தவை.[1] மோனோகார்பிக் தாவரங்களின் பூக்கள் கனியாகும் முன், அவற்றைப் பறித்து நீக்குவதன் மூலம் அவற்றின் வாழ்நாளை நீட்டிக்கலாம் அல்லது மொட்டுப் பருவத்திலேயே பறித்து விடலாம்.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மோனோகார்பிக்&oldid=3932673" இலிருந்து மீள்விக்கப்பட்டது