மோரிஸ் நினைவு கட்டிடம்
மோரிஸ் நினைவு கட்டடம் (Morris Memorial Building) அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தின் நாஷ்வில்வில் உள்ள ஒரு வரலாற்றுக் கட்டடம் ஆகும். இது அமெரிக்காவில் நிறுவப்பட்ட ஆபிரிக்க-அமெரிக்க தேசிய திருமுழுக்காளர்கள் மாநாட்டுக் குழுவினருக்காக 1920 ல் கட்டப்பட்டது. அதன் நீண்டகாலத் தலைவரான எலியாஸ் கேம்ப் மோரிஸின் பெயரால் வழங்கப்பட்டுவருகின்றது.
மோரிஸ் நினைவு கட்டடம் | |
---|---|
ஐ.அ. தேசிய வரலாற்று இடங்கள் பதிகை | |
மோரிஸ் நினைவு கட்டடம் (2010)
| |
அமைவிடம்: | 330 சார்லட் நிழற்சாலை, நாஷ்வில், அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
ஆள்கூறு: | 36°10′01″N 86°46′49″W / 36.16694°N 86.78028°W |
கட்டியது: | 1924–1926 |
கட்டிடக் கலைஞர்: |
மெக்கிசாக் & மெக்கிசாக் |
கட்டிடக்கலைப் பாணி(கள்): |
புதுச்செவ்வியல் |
தே.வ.இ.பவில் சேர்ப்பு: |
2 சனவரி 1985 |
தே.வ.இ.ப குறிப்பெண் #: |
85000046[1] |
இருப்பிடம்
தொகுடென்னசி மாநிலத்தின் டேவிட்சன் மாவட்டத்தின் இருக்கையான 330 சார்லோட் நிழற்சாலையில், நாஷ்வில்லில் இந்தக் கட்டடம் அமைந்துள்ளது.[2][3]
வரலாறு
தொகுஇதன் கட்டுமானம் 1924 இல் தொடங்கி 1926 ஆம் ஆண்டில் நிறைவு செய்யப்பட்டது. இது அமெரிக்காவில் நிறுவப்பட்டஒரு ஆபிரிக்க அமெரிக்கன் கிறிஸ்தவப் பிரிவான தேசிய திருமுழுக்காளர்கள் மாநாடு குழுவின் நாஷ்வில் அலுவலகத்தில் ஞாயிறு பள்ளி வெளியீட்டு வாரியம் பணியாற்றுவதற்காக கட்டப்பட்டது.[3][4] இந்தக் கட்டடம் பல ஆபிரிக்க அமெரிக்க வணிக அலுவலகங்களைக் கொண்டிருந்தது.
2016 ஆண்டுப்படி, தொடக்கத்திலிருந்தே ஆபிரிக்க-அமெரிக்க வணிக அலுவலகங்களைக் கொண்டிருந்த கட்டடங்களில் இன்னும் எஞ்சியிருக்கும் ஒரே கட்டடம் இதுவாகும். [5]
கட்டிடக்கலை முக்கியத்துவம்
தொகுஇது கட்டடக்கலை நிறுவனமான மெக்கிசாக் & மெக்கிசாக்கால் புதுச்செவ்வியல் கட்டிடக்கலை பாணியில் வடிவமைக்கப்பட்டது. 1985 சனவரி இரண்டாம் நாள் முதல் இது ஐக்கிய அமெரிக்க வரலாற்று இடங்களுக்கான தேசியப் பதிவேட்டில் பட்டியலிடப்பட்டுள்ளது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "National Register Information System". National Register of Historic Places. National Park Service. 2010-07-09.
- ↑ 2.0 2.1 "Morris Memorial Building". National Park Service. பார்க்கப்பட்ட நாள் September 25, 2015.
- ↑ 3.0 3.1 "Tennessee Thematic Resource Nomination Survey Form: Morris Memorial Building". National Park Service. பார்க்கப்பட்ட நாள் September 24, 2015.
- ↑ Wynn, Linda T. "McKissack and McKissack Architects (1905- )". Tennessee State University. Retrieved October 25, 2016.
- ↑ Ward, Getahn. "2016 Nashville Nine: Music City's most endangered historic places". The Tennessean. பார்க்கப்பட்ட நாள் 25 October 2016.