மோவா (Moa) நியூசிலாந்தில் மட்டுமே வாழ்ந்த பறக்கவியலாத பெரிய பறவை. ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த இனம் முற்றிலும் அழிந்து விட்டது. தீவுக்கு வந்த மனிதர்கள் பறக்க இயலாத இப் பறவையை எளிதில் வேட்டையாடி உணவாக்கியதே இப்பறவையின் அழிவுக்கு முக்கிய காரணம்.

மோவாவை மனிதர்கள் வேட்டையாடுதல்

மோவா பறவைப் பேரினத்தில் 11 சிற்றினங்கள் இருந்தன. அவற்றுள் மிகப் பெரியதான டைடார்னிஸ் 230 கிலோ எடையும் 12 அடி உயரமும் கொண்டிருந்தது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=மோவா&oldid=1828997" இருந்து மீள்விக்கப்பட்டது