மனித உரிமைப் பாதுகாப்பு மையம்
(ம.உ.பா.மை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் தமிழ்நாட்டில் இயங்கும் ஒரு மனித உரிமைகள் அமைப்பு ஆகும். வழக்கறிஞர்கள் முன்னின்று இயங்கும் இந்த அமைப்பு சாதிய தீண்டாமையை ஒழிப்பதில், மொழி உரிமைகளை நிலைநாட்டுவதில், தொழிலாளர் பெண்கள் உரிமைகளைப் பேணுவதில், காவல்துறை அதிகார துர்பிரோயகங்களை கண்காணிப்பதில், வணிக நிறுவனங்களில் அத்துமீறிய நடத்தைகளை கட்டுப்படுத்துவதில் அக்கறை காட்டி இயங்கி வருகிறது. "மனித உரிமை காப்போம்! மக்கள் விடுதலைக்கு அணிவகுப்போம்! என்பதே இவர்களின் முழக்கம் ஆகும். இவர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கிளைகள் அமைத்து செயற்பட்டு வருகின்றார்கள்.
தில்லைச் சிற்றம்பலத்தில் தமிழ் மொழியில் ஆறுமுக சாமிக்குத் துணை நின்ற அமைப்புகளில் இந்த அமைப்பும் முக்கிய பங்காற்றியது.
வெளி இணைப்புக
தொகு- மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் கோவைதொடக்கவிழா : நம்பிக்கையின் ஒளிக்கீற்று!
- இந்த அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளராக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் உள்ளார்.
- இந்த அமைப்பு தமிழகம் முழுவதும் கிளைகளை அமைத்து முற்போக்கு வழக்கறிஞர்கள் மற்றும் இடது சாரிய முற்போக்கு சிந்தனையாளர்களை கொண்டு ம்செயல்பட்டு வருகிறது.
- இதன் நிர்வாக குழு உறுப்பினர்களாக தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைவர் செயலர்கள் உள்ளார்கள்.
- மனித (மக்கள் ) உரிமையே அனைத்து உரிமைகளுக்கும் திறவுகோள் என்ற முழக்கத்தினை கொண்டு செயல்பட்டு வருகிறது.
- இந்த அமைப்பு மக்கள் உரிமை சார்ந்த பிரச்சினைகளில் தலையிட்டு நீதிமன்றத்தின் மூலமாகவும் களப்போராட்டங்களின் மூலமாகவும் தீர்வினை ஏற்படுத்தி கொடுக்கக்கூடிய ஒன்றாக செயலாற்றி வருகின்றது.
- இந்த அமைப்பின் நிறுவனராக திருச்சியை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் போஜகுமார் உள்ளார்.
- சமூக நலன் சார்ந்த எந்த ஒரு நபரும் இதில் உறுப்பினராக இணைந்து செயலாற்றலாம். உறுப்பினாரக இணைய சென்னை கிளை-9842812062, திருச்சி கிளை-9444253030, மதுரை கிளை-9865348163