யக்ஞவராகர்

யக்ஞவராகர் பத்தாம் நூற்றாண்டைச் சார்ந்த மருத்துவர் ஆவார். கம்போடியாவிலுள்ள அங்கோர் வாட் அரண்மனையில் இராஜேந்திரவர்மன் அரசவையில் மருத்துவர் ஆவார்.[1] இவர் சமயத் தலைவராகவும் அறியப்பட்டார். வேத விற்பனரான இவர் பாரம்பரிய கம்போடிய ஆயுர்வேத மருத்துவ முறையைப் பின்பற்றினார். வேதவிற்பனரான இவரது தந்தை தாமோதராவிடமிருந்து மருத்துவ முறைகளை யக்ஞ்வராகர் கற்றுக் கொண்டார். பிராமண குலத்தைச் சார்ந்த இவர் அரசர் ஹர்ஷ்வர்மன் என்பவரின் பேரனாவார்.[2]}[3]:79 இவரது சமயப் பங்களிப்பிற்கும், ஏழைகளுக்கு உதவி செய்ததற்காகவும் அறியப்பட்டார். இதனால் இவருக்கு மயிற்பீலிக் குடை வழங்கப்பட்டது. மேலும் இவர் இசையிலும் வானியல் அறிவிலும் திறமை பெற்றிருந்தார். இவரது தம்பி விஷ்ணுகுமாராவுடன் இணைந்து அங்கோர்வாட்டிற்குக் வடக்கே 15 மைல் தொலைவில் ஈஸ்வரபுரா எனும் கோயிலை நிர்மாணித்தார்.[4] அரசர் ஜெயவர்மன் அரசவையில் குருவாகவும் ஆயுர்வேத மருத்துவராகவும் பணியாற்றினார்.

மேற்கோள்கள்

தொகு
  1. Bynum, WF & Bynum, Helen (2006) Dictionary of Medical Biography. Greenwood Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-313-32877-3.
  2. Coedès, George (1968). Walter F. Vella (ed.). The Indianized States of Southeast Asia. trans.Susan Brown Cowing. University of Hawaii Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8248-0368-1.
  3. Higham, C., 2001, The Civilization of Angkor, London: Weidenfeld & Nicolson, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781842125847
  4. Higham, C., 2014, Early Mainland Southeast Asia, Bangkok: River Books Co., Ltd., பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9786167339443
"https://ta.wikipedia.org/w/index.php?title=யக்ஞவராகர்&oldid=3882446" இலிருந்து மீள்விக்கப்பட்டது