யனீன் ஆளுநரகம்
ஜெனின் கவர்னரேட் (Jenin Governorate, அரபு மொழி: محافظة جنين Muḥāfaẓat Ǧanīn ; எபிரேயம்: נפת ג'נין Nafat J̌anin ) என்பது பாலஸ்தீனத்தின் 16 ஆளுநரகங்களில் ஒன்றாகும். இது மேற்குக் கரையின் வடக்குப் பகுதியைக் கொண்டுள்ளது. இதில் ஜெனின் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளை உள்ளடக்கியதாக உள்ளது.
யனீன் ஆளுநரகம் | |
---|---|
நாடு | பலத்தீன் |
பாலஸ்தீனிய மத்திய பணியகத்தின் 2007 ஆண்டைய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஆளுநரகத்தின் மக்கள் தொகை 256,619 ஆகும். இவர்கள் 47,437 வீடுகளில் வாழ்கின்றனர். மக்கள் தொகையில் 100,701 பேர் (அல்லது 39%) 15 வயதிற்குட்பட்டவர்கள். இவர்களில் 80,263 (அல்லது 31%) பேர் பதிவு செய்யப்பட்ட அகதிகள். பாலஸ்தீனிய புள்ளிவிவர பணியகத்தின் 1997 ஆண்டைய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஆளுநரகத்தின் மக்கள் தொகை 195,074 ஆகும். [1]
பாலஸ்தீனிய தேசிய அதிகாரசபையின் கட்டுப்பாட்டின் கீழ் இந்த ஆளுநரகத்தின் பெரும்பான்மையான நிலங்கள் உள்ளன. இவ்வாறு பாலஸ்தீன தேசிய அதிகாரசபையின் கட்டுபாட்டில் பெரும்பான்மையான நிலங்களைக் கொண்ட மேற்குக் கரையில் உள்ள ஒரே ஆளுநரகம் இதுதான். 2005 இல் காசாவிலிருந்து இஸ்ரேல் வெளியேறும் திட்டத்தின் ஒரு பகுதியாக இங்கிருந்த நான்கு இஸ்ரேலிய குடியேற்றங்கள் வெளியேற்றப்பட்டன.
வட்டாரங்கள்
தொகுமாநகரங்கள்
தொகு- ஜெனின் (ஜெனின் முகாம் அடங்கும்)
- கபதியா
நகராட்சிகள்
தொகு- அஜ்ஜா
- அராபா
- புர்கின்
- தஹியத் சபா அல்-கெய்
- டீர் அபு டாஃப்
- ஜபா
- காஃப்ர் டான்
- காஃப்ர் ராய்
- மீத்தலுன்
- சிலாத் அல் ஹரித்தியா
- சிலாத் அட்-தஹ்ர்
- யாபாத்
- அல்-யமுன்
- ஸபாப்தே
கிராம சபைகள்
தொகுபின்வருவது 1,000 க்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட ஜெனின் கவர்னரேட்டில் உள்ள பாலஸ்தீனிய பகுதிகளின் பட்டியல்.
|
|
ஆதாரங்கள்
தொகு- ↑ "Palestinian Population by Locality, Subspace and Age Groups in Years [Jenin Governorate]". Palestinian Central Bureau of Statistics (PCBS). 1997. Archived from the original on 2012-03-04. பார்க்கப்பட்ட நாள் 2010-12-25.