யாக்கூப் அசன் சேத்

இந்திய விடுதலைப் போராட்ட வீரர்

மெளலானா யாக்கூப் அசன் சேத் (Yakub Hasan Sait - பிறப்பு 1875 – 1940) ஒரு தமிழக தொழிலதிபர், அரசியல்வாதி மற்றும் விடுதலைப் போராட்ட வீரர். இவர் 1937 முதல் 1939 வரை சென்னை மாகாணத்தின் பொதுப்பணித்துறை அமைச்சராகப் பணியாற்றியவர்.

பிறப்பும் கல்வியும்

தொகு

1875ல் நாக்பூரில் பிறந்த யாக்கூப் அசன் சேத், தொடக்க கல்வியை நாக்பூரிலும், பின்னர் அலிகார் பல்கலைக்கழகத்திலும் கல்வி கற்றார். குரான் மற்றும் பிற இஸ்லாமிய நூல்கள் பற்றிய அவரது அபார அறிவின் காரணமாக, சேத் பெரும்பாலும் "மௌலானா" என்றும் அழைக்கப்பட்டார். [[1]]

வியாபாரம்

தொகு

1893ல் பெங்களூரில் வர்த்தகராகத் தன் தொழில் வாழ்க்கையைத் தொடங்கியவர், நவாப் சி. அப்துல் ஹக்கீமின் கீழ் சர்வதேச வணிக முகவராக பணியாற்றினார். பின்னர் 1901-ம் ஆண்டு சென்னையில் குடியேறினார்.[1]

அரசியல் மற்றும் சிறை வாழ்க்கை

தொகு

1916ம் ஆண்டு சென்னை மாகாண சட்டமன்றத்துக்கு தென்னிந்திய வர்த்தக சபையின் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்னை நகர் மன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார். அகில இந்திய முஸ்லிம் லீக்கினை உருவாக்கியவர்களுள் சேத்தும் ஒருவர்.[2][3]

1916 டிசம்பரில் லக்னோவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் ஆகிய இரு கட்சிகளின் கூட்டு அமர்வின் வரைவில் உருவாக்கப்பட்ட லக்னோ ஒப்பந்தத்தின் அமர்வில் பங்கேற்ற சென்னை மாகாணத்தின் ஒரே முஸ்லிம் அரசியல்வாதியும் இவர்தான்.

கிலாபத் இயக்கத்தில் பங்கேற்றமைக்காக‌ 1919 இல் ஆறு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றதற்காக 1921ல் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் சட்டமறுப்பு இயக்கத்தில் பங்கேற்கவில்லை. 1923 இல் சிறையிலிருந்து திரும்பிய அவர் காங்கிரஸில் இருந்து ராஜினாமா செய்து சென்னை மாகாண முஸ்லிம் லீக்கை நிறுவியதில் பங்காற்றினார்.[4]

சேட் 1927 தேர்தலில் நின்று மாகாண சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். என்.ஜி. ரங்காவின் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி வைத்தார்.[5][6]

1937 தேர்தலுக்கு சிறிது காலம் முன்னர் முசுலிம் லீகை விட்டு வெளியேறி இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார். முசுலிம் லீகின் இரு-தேசக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாததே இதற்குக் காரணம், மற்ற விசயங்களில் முஸ்லீம் லீக்கினை ஆதரித்தார். [7]

1937-39 காலகட்டத்தில் சி. ராஜகோபாலாச்சாரியின் அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராகப் பணியாற்றினார். பிரிட்டன் ஜெர்மனி மீது போரை அறிவித்தபோது எதிர்ப்பு தெரிவித்து மற்ற அமைச்சர்களுடன் சேட்டும் ராஜினாமா செய்தார்.[8]

இறப்பு

தொகு

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சில மாதங்களுக்குப் பிறகு, சேட்டுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 23 மார்ச் 1940 இல் இறந்தார்.[9] He died soon afterwards.[9]

மேற்கோள்கள்

தொகு
  1. More, J. B. Prashant (1997). Political Evolution of Muslims in Tamilnadu and Madras 1930–1947. Orient Blackswan. p. 246. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-250-1192-7.
  2. More, J. B. Prashant (1997). Political Evolution of Muslims in Tamilnadu and Madras 1930–1947. Orient Blackswan. p. 39. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-250-1192-7.
  3. More, J. B. Prashant (1997). Political Evolution of Muslims in Tamilnadu and Madras 1930–1947. Orient Blackswan. p. 47. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-250-1192-7.
  4. More, J. B. Prashant (1997). Political Evolution of Muslims in Tamilnadu and Madras 1930–1947. Orient Blackswan. p. 43. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-250-1192-7.
  5. More, J. B. Prashant (1997). Political Evolution of Muslims in Tamilnadu and Madras 1930–1947. Orient Blackswan. p. 120. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-250-1192-7.
  6. More, J. B. Prashant (1997). Political Evolution of Muslims in Tamilnadu and Madras 1930–1947. Orient Blackswan. p. 121. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-250-1192-7.
  7. More, J. B. Prashant (1997). Political Evolution of Muslims in Tamilnadu and Madras 1930–1947. Orient Blackswan. p. 46. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-250-1192-7.
  8. More, J. B. Prashant (1997). Political Evolution of Muslims in Tamilnadu and Madras 1930–1947. Orient Blackswan. p. 105. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-250-1192-7.
  9. 9.0 9.1 The Indian Review. G. A. Natesan & Co. 1940. p. 227.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யாக்கூப்_அசன்_சேத்&oldid=4090806" இலிருந்து மீள்விக்கப்பட்டது