யாதும்
யாதும் என்பது தமிழ் இசுலாமியர்களின் வரலாற்றை, அடையாளத்தை ஆராயும் ஓர் ஆவணப் படம் ஆகும். தமிழ்ச் சூழலில் தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளுடன் இசுலாம் எவ்வாறு வேரூன்றியது என்பதை இந்த ஆவணப்படம் எடுத்துரைக்கிறது. தமிழ் இசுலாமிய கட்டிடக்கலை, இசை, இலக்கியம், தொல்லியல், கல்வெட்டியல் உட்பட்ட சான்றுகளைக் கொண்டு எடுத்துரைக்கிறது. இந்தப் படத்தை இயக்கி இருக்கும் கோம்பை ச. அன்வர் "தன்னுடைய வேர்களைத் தேடும் ஒரு தமிழ் இசுலாமியரின் பயணம் இப்படம்" என்று கூறியுள்ளார்.[1]