யானைன் கன்னேசு
யானைன் கன்னேசு (Janine Connes) (பிறப்பு: 1934) ஒரு பிரெஞ்சு வானியலாளர் ஆவார். இவர் தன் ஆராய்ச்சிவழி பூரியர் உருமாற்ற அகச்சிவப்புக் கதிர்நிரலியல் முறையை உருவாக்கினார்.
யானைன் கன்னேசு Janine Connes | |
---|---|
பிறப்பு | 1934 (அகவை 89–90) |
தேசியம் | பிரான்சியர் |
ஆய்வேடு | (1961) |
இவர் தன்னுடன் பணிபுரிந்த வானியலாலராகிய பியேர் கன்னேசுவை மணந்தார்; இவர்கள் இருவரும் எப்போதும் கூட்டாகவே ஆய்வில் ஈடுபட்டனர்.[1]
ஆராய்ச்சி
தொகுஇவர் அகச்சிவப்புக் கதிர்நிரலிய நுட்பத்தின் பூரியே உருமாற்றங்களை பகுப்பாய்வு செய்தார். இவர் இப்புலத்தில் 1954 முதலே ஈடுபட்டு வருகிறார்.[2] இவரது ஆய்வுரையும் பின்னர் வெளியிட்ட ஆய்வுகளும் இம்முறையின் நடைமுறைக் கூறுபாடுகளைக் குறித்த ஆழமான ஆய்வாக அமைந்தது. இவரது ஆய்வுரை இம்முறையின் வடிவமைப்புக்கான பல தொடக்கநிலை நெறிமுறைகளை உருவாக்கியது.[3][4] இம்முறையைப் பின்பற்றி இவரும் இவரது கணவரும் வெள்ளி, செவ்வாய் கோள்களின் படிமங்களைப் பிக் து மிதி தெ பிகோர் வான்காணகத்தில் எடுத்துள்ளனர். இவை முன்பு அதுநாள் வரை எடுக்கப்பட்ட படிமங்களை விட சிறந்தனவாக அமைந்தன.[3][5] கன்னேசு குறுக்கீட்டளவியலில்வழியிலான பதிவின் மேம்பாட்டை இனங்கண்டார்.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ James Lovelock (2009). The Vanishing Face of Gaia: A Final Warning. Penguin books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0141039256. பார்க்கப்பட்ட நாள் 27 March 2014.
- ↑ B. Joerges, T. Shinn (2001). Instrumentation Between Science, State and Industry. Springer. p. 127. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0792367367. பார்க்கப்பட்ட நாள் 27 March 2014.
- ↑ 3.0 3.1 McLean, Ian (1997). "Janine Connes". Contributions of 20th Century Women to Physics. University of California. பார்க்கப்பட்ட நாள் 27 March 2014.
- ↑ R. A. Hanel (2003). Exploration of the Solar System by Infrared Remote Sensing. கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். p. 222. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0521818974. பார்க்கப்பட்ட நாள் 27 March 2014.
- ↑ National Research Council (U.S.). Panel on Remote Atmospheric Probing (1969). Atmospheric Exploration by Remote Probes: Final Report of the Panel on Remote Atmospheric Probing. Vol. 2. National Academies. பார்க்கப்பட்ட நாள் 27 March 2014.
- ↑ Da-Wen Sun (2009). Infrared Spectroscopy for Food Quality Analysis and Control. Academic Press. p. 151. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 008092087X. பார்க்கப்பட்ட நாள் 27 March 2014.