யாமினி தலால்
யாமினி தலால் (Yamini Dalal) குரோமாடின் அமைப்பு மற்றும் புவிப்பரப்பு தோற்றவியல் பொறிமுறைகளில் நிபுணத்துவம் பெற்ற ஓர் இந்திய அமெரிக்க உயிர்வேதியியலாளர் ஆவார். இவர் தேசிய புற்றுநோய் நிறுவனத்தில் மூத்த ஆய்வாளராகப் பணிபுரிகிறார்.
யாமினி தலால் Yamini Dalal | |
---|---|
துறை | உயிர்வேதியியல் |
பணியிடங்கள் | தேசிய புற்றுநோய் நிறுவனம் |
கல்வி கற்ற இடங்கள் | மும்பை புனித சேவியர் கல்லூரி (இளநிலை) பர்தியூ பல்கலைக்கழகம் (முனைவர்) |
ஆய்வு நெறியாளர் | Arnold Stein |
தாக்கம் செலுத்தியோர் | சிடீவன் எனிக்காஃப் |
கல்வி
தொகுயாமினி தலால் இந்தியாவின் மும்பை நகரத்திலுள்ள புனித சேவியர் கல்லூரியில் இளம் அறிவியல் பட்டம் பெற்றார். தனது இளங்கலை ஆண்டுகளில் குரோமோசோம் அமைப்பு மற்றும் புவிப்பரப்பு தோற்றவியல் மரபணு ஒழுங்குமுறை ஆகிய பிரிவுகளில் ஆர்வம் காட்டினார். 1995 ஆம் ஆன்டு உயிர் வேதியியல் மற்றும் வாழ்க்கை அறிவியல் ஆகிய இரட்டைப் பட்டப் படிப்பை முடித்தார். தனது முதுநிலை படிப்புக்காக அமெரிக்கா சென்றார். பர்தியூ பல்கலைக்கழகத்தின் அர்னால்டு சிடீன் ஆய்வகத்தில், டிஎன்ஏ வரிசை மையக்கருத்து மற்றும் லிங்கர் இசுடோன்கள் குரோமாடின் கட்டமைப்பை எப்படி வடிவமைக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள பாரம்பரிய குரோமாடின் உயிர்வேதியியல் கருவிகளைப் பயன்படுத்தினார். இந்த நேரத்தில், சுண்டெலி மரபணுவின் பகுதிகள் கடினமான மற்றும் நெகிழ்வான டிஎன்ஏவின் மாற்றுப் பாதைகளைக் கொண்டிருப்பதை இவர் கண்டுபிடித்தார். இது நியூக்ளியோசோம் நிலைகளை சிலிகோ கணிப்பதற்கு அனுமதித்தது. இந்த நிலைகள் சுத்திகரிக்கப்பட்ட இசுடோன்கள் மற்றும் டிஎன்ஏவைப் பயன்படுத்தி செயற்கை முறையில் மறுபரிசீலனை செய்யப்படுகிறது. விவோ எனப்படும் உயிரினத்திற்குள் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சியில் இது கண்டறியப்பட்டது. எலிகளில் வளர்ச்சியால் ஒழுங்குபடுத்தப்பட்ட மரபணுக்கள். லிங்கர் இசுடோன் எச்1 நியூக்ளியோசோம் நிலைப்படுத்தல் மற்றும் குரோமாடின் மடிப்பு ஆகியவை செயற்கை மற்றும் உயிரினத்திற்குள் எவ்வாறு பாதிக்கும் என்பதையும் இவர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வுகளுக்காக இவர் தனது முனைவர் பட்டத்தை பர்தியூ பல்கலைக்கழகத்திலிருந்து பெற்றார்.
அடுத்த தர்க்கரீதியான படிநிலை இசுட்டோன்களின் வகைகளாகும். குரோமாடின் இழையில் உள்ள உள்ளார்ந்த மாறுபாடு உயிரியல் செயல்பாடுகளின் பன்முகத்தன்மையை எப்படி முன்னெடுத்து குறியாக்குகிறது என்பதை பற்றிய ஆய்வுமாகும்.[1] குரோமேட்டின் கட்டமைப்பின் இந்த அம்சத்தைப் படிப்பதற்காக யாமினி தலால் 2003-2007 ஆம் ஆன்டுகளில் வாசிங்டனிலுள்ள சீட்டில் நகரத்திற்குச் சென்றார். அங்கு சிடீவன் எனிகாஃப்புடன் இணைந்து பிரெட் அட்கின்சன் புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் முனைவர் பட்ட மேபடிப்பைத் தொடர்ந்தார்.[2] இவரும் சக ஊழியர்களும் சேர்ந்து உயிர்வேதியியல் பகுப்பாய்வுகளின் பல்வேறு வரம்புகளைப் பயன்படுத்தி பழப்பூச்சியில் சென்ட்ரோமர் எனப்படும் மையத்தைக் கண்டுபிடித்தனர். குறிப்பிட்டதொரு இசுட்டோன் மாறுபாடு நியமனமற்ற நியூக்ளியோசோம்களை உருவாக்குகிறது,. இதன் அம்சங்கள் ஆர்க்கிபாக்டீரியாவில் காணப்படும் மூதாதைய நியூக்ளியோசோம்களை நினைவூட்டுகின்றன.
தொழில் மற்றும் ஆராய்ச்சி
தொகுதேசிய சுகாதார நிறுவனத்தில் யாமினி தலால் 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் சேர்ந்தார்.[2] தேசிய புற்றுநோய் நிறுவனத்தில் ஏற்பி உயிரியல் மற்றும் மரபணு வெளிப்பாடு ஆய்வகத்தில் இவர் ஒரு மூத்த ஆய்வாளராக உள்ளார். குரோமாடின் கட்டமைப்பு மற்றும் புவித் தோற்ரவியல் பொறியியல் குழுவின் இயக்குனருமாவார். 2018 ஆம் ஆண்டு தேசிய சுகாதார நிறுவனத்தில் யாமினி தலாலுக்கு பதவிக்காலம் வழங்கப்பட்டது.
இந்த அசாதாரண அம்சங்களில் சில மனித உயிரணுக்களில் பாதுகாக்கப்படுவதை யாமினி தலாலின் ஆய்வகம் காட்டுகிறது. சென்ட்ரோமெரிக் நியூக்ளியோசோம்கள் கட்டமைப்பு மற்றும் செல் சுழற்சி மாற்றங்களில் ஊசலாடுகின்றன. இத்தகைய ஊசலாட்டங்கள் மனித புற்றுநோய்களில் தொந்தரவு செய்யப்படுகின்றன. இதில் சென்டோமர் புரோட்டின் ஏ எனப்படும் இசுட்டோன் மாறுபாடு இயல்பாகவே தவறாக கட்டுப்படுத்தப்படுகிறது மற்றும் உறுதியற்ற தன்மையுடன் தொடர்புடைய மனித மரபணுவின் வேற்றிடப் பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது. இவருடைய ஆய்வகம் மனித சென்ட்ரோமியர் அளவீடுகளுக்குள் மீண்டும் மீண்டும் வரும் இடங்களின் படியெடுத்தலின் செயல்பாட்டைப் பிரிப்பதில் பயணிக்கிறது. மனித மூளைக் கட்டிகளில் உள்ள மற்ற இசுடோன் வகைகளுக்கு ஆய்வுகள் இப்போது விரிவுபடுத்தப்பட்டுள்ளன. மேலும் புற்றுநோய் சார்ந்த குரோமாடின் தொடர்புகளை சீர்குலைக்க இடைநிலை அணுகுமுறைகளும் பயன்படுத்தப்படுகின்றன[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Yamini Dalal, Ph.D." (in en). Center for Cancer Research. 2014-08-12. https://ccr.cancer.gov/laboratory-of-receptor-biology-and-gene-expression/yamini-dalal."Yamini Dalal, Ph.D." Center for Cancer Research. 2014-08-12. Retrieved 2020-08-26. இந்தக் கட்டுரை பொது உரிமையில் உள்ள மூலத்திலிருந்து உரையைக் கொண்டுள்ளது.
- ↑ 2.0 2.1 "Colleagues: Recently Tenured". NIH Intramural Research Program (in ஆங்கிலம்). 2018-05-01. பார்க்கப்பட்ட நாள் 2020-08-26. இந்தக் கட்டுரை பொது உரிமையில் உள்ள மூலத்திலிருந்து உரையைக் கொண்டுள்ளது.