யாவேல் (Jael அல்லது Yael (எபிரேயம்: Ya'el, יָעֵל) அல்லது யாகேல் என்பவர் எபிரேய வேதாகமத்தில் நியாயாதிபதிகள் நூலில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு பெண். இவர் சிசேராவைக் கொன்று, பண்டைய இசுரவேலர்களை யாபீன் மன்னனின் படையினரிடம் இருந்து விடுவித்த கதாநாயகியாகக் குறிப்பிடப்பட்டுள்ளார்.

யாவேல்
யாவேல், சிசேரா
இருப்பிடம்கேதேசு, இசுரேல்
தேசியம்கேனியர்
மற்ற பெயர்கள்யாகேல்
வாழ்க்கைத்
துணை
ஏபேர் (கேனியர்)

குடும்பம்

தொகு

யாவேல் கேனியரான ஏபேரின் மனைவி ஆவார்.[1] கேனியர்கள் ஒரு நாடோடிப் பழங்குடிகள். அவர்களில் சிலர் இசுரவேலருக்கு அருகில் குடியிருந்தனர். இசுரவேலர் இவர்களுடன் பலவிதமான திருமணத் உறவுகளை ஏற்படுத்தியிருந்தனர் என வேதாகமம் பதிவு செய்கிறது. மோசேயின் மாமனார் ஒரு கேனியன் என வெளிப்படையாகத் தெரிகிறது. ஆனால் இது ரெகுவேலா என்று தெளிவாக இல்லை. கேனியர்கள் மீதியானிய குழுவில் ஒரு பகுதியாகவும் இருந்திருக்கலாம்.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=யாவேல்&oldid=3882436" இலிருந்து மீள்விக்கப்பட்டது