யாஸ்மீன் ஹமீத்

யாஸ்மீன் ஹமீத் ( Yasmeen Hameed ) ஒரு பாக்கித்தானிய உருது கவிஞரும், மொழிபெயர்ப்பாளரும், கல்வியாளரும் ஆவார். [1]

தொழில்

தொகு

யாஸ்மீன் ஹமீது அவர்கள் கல்வி, இலக்கியம் மற்றும் கலைத் துறைகளில் முப்பது வருடங்களுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். இவர் லாகூர் மேலாண்மை அறிவியல் பல்கலைக்கழகத்தில் சமூக அறிவியல் துறையில் தெற்காசிய மொழிகள் மற்றும் இலக்கியத்திற்கான குர்மணி மையத்தின் நிறுவன இயக்குநராக இருந்தார். அங்கு இவர் 2007 முதல் ஆகஸ்ட் 2016 வரை பணியாற்றினார்.

இவர் பாக்கித்தானிய தொலைக்காட்சியில் புகழ்பெற்ற பல பாக்கித்தானிய இலக்கிய ஆளுமைகளை நேர்காணல் செய்துள்ளார். மேலும், தேசிய மற்றும் சர்வதேச அளவில் கவிதை கருத்தரங்கிலும் பரவலாக பங்கேற்றுள்ளார். [2] [3]

1995 இல் லண்டன் மற்றும் 1996 இல் வாசிங்டன் மற்றும் 1996 இல் பாக்கித்தானில் நடந்த துடுப்பாட்ட உலகக்கிண்ணம் கலாச்சார விழா ஆகியவற்றில் பாக்கித்தான் அரசாங்கத்தால் நிதியுதவி செய்யப்பட்ட கலாச்சார நிகழ்ச்சிகளுக்காக ஆங்கிலத்தில் உரைகளை எழுதியுள்ளார். தி டெய்லி டான் செய்தித்தாளின் "புக்ஸ் & ஆதர்ஸ்" என்ற துணை இதழில் மாதாந்திர பத்தியிலும் இவர் பங்களித்துள்ளார்.

சான்றுகள்

தொகு
  1. "INTERVIEW: Yasmeen Hameed (Books And Authors)". Dawn (newspaper). 18 August 2012. பார்க்கப்பட்ட நாள் 12 August 2019.
  2. Amel Ghani (21 November 2015). "Faiz festival: Master critic eulogises immortal poet". பார்க்கப்பட்ட நாள் 12 August 2019.
  3. 10th Karachi Literature Festival concludes on a high note Daily Times (newspaper), Published 4 March 2019, Retrieved 12 August 2019

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=யாஸ்மீன்_ஹமீத்&oldid=3685847" இலிருந்து மீள்விக்கப்பட்டது