யுக்திவழி

கேரளாவில் வெளிவந்த ஒரு இதழ்

யுக்திவழி (Yukthivadi) அல்லது யுக்திவடி (பகுத்தறிவாளன்) என்பது அரை நூற்றாண்டுக்கு மேலாக கேரளாவில் வெளிவந்த பகுத்தறிவு இதழாகும். கேரளாவில் பகுத்தறிவுக் கொள்கைகள் வேரூன்ற இந்த இதழின் பங்களிப்புக் கணிசமானது. இதன் முதல் இதழில் இதன் நோக்கம் பின்வருமாறு 1929 ஆம் ஆண்டு குறிப்பிடப்பட்டது.

பகுத்தறிவுக் கொள்கை ஒரு சமயம் அல்ல. அது பகுத்தாய்ந்து அறிவை அடையவதற்கான மனநோக்கு. யுக்திவழி மக்களிடையே அந்த மனநோக்கை தோற்ற முயற்சி செய்யும். இதைச் செய்வதற்கு, அறிவற்ற நம்பிக்கைகளை விமர்சித்து, பகுத்தறிவை பரப்ப வேண்டும். யுக்திவழிக்கு பரமார்ந்த அறிவுகள் எதிலும் நம்பிக்கை இல்லை. எனவே புதிய தகவல்களையும், அறிவையும் வைத்து தன்னை திருத்திக் கொள்ள யுக்திவழி தயங்காது. ஒவ்வொரு பகுத்தறிவுவாதியும் அப்படிச் செய்யக் கடமைப்பட்டுள்ளார். யுக்திவழியின் ஒரே ஒரு முதன்மைக் கொள்கை, அறிவு பகுத்தறிவுச் சிந்தனையின் அடிப்படையில் அமையவேண்டும் என்பதே.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=யுக்திவழி&oldid=3226268" இலிருந்து மீள்விக்கப்பட்டது