யுரேனியம்(IV) ஐதரைடு

யுரேனியம்(IV) ஐதரைடு (Uranium(IV) hydride) என்பது UH4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். யுரேனியம் மற்றும் ஐதரசன் சேர்ந்து இந்த உலோக ஐதரைடு சேர்மம் உருவாகிறது. சீரொளியால் வெட்டப்பட்ட யுரேனியம் அணுக்கள் ஈரைதரசனுடன் சேர்ந்து விளைபொருள் திட ஆர்கனால் யுரேனியம்(IV) ஐதரைடாகப் பிடிக்கப்படுகிறது என சோட்டர் 1997 ஆம் ஆண்டில் அறிவித்தார். இச்சேர்மத்தின் கட்டமைப்பு தொடர்பான பணிகள் அகச்சிவப்பு நிறமாலை ஆதாரங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டன. அடர்த்தி சார்பு பகுப்பாய்வு கணக்கீடுகள் இப்பணிகளுக்கு பெரிதும் உறுதுணையாய் இருந்தன[1]. நான்முகம் சார்ந்த (Cs) கட்டமைப்பு கொண்டதாக யுரேனியம்(IV) ஐதரைடின் கட்டமைப்பு இருக்கிறது. இரண்டு ஐதரசன் மூலக்கூறுகளுக்கிடையில் யுரேனியம் அடுத்தடுத்து நுழைக்கப்படும் பொழுது இச்சேர்மம் உருவாகிறது.

U + H2 → UH2
UH2 + H2 → UH4

மேலும் ஐதரசனுடன் வினைபுரியும் போது மட்டுமே ஈரைதரசனின் கலப்புத் தொகுதி சேர்மங்கள் உருவாகின்றன UH4(H2)n (1 ≤ n ≤ 6). [2]

மேற்கோள்கள்

தொகு
  1. Souter, Philip F.; Kushto, Gary P.; Andrews, Lester; Neurock, Matthew (1997). "Experimental and Theoretical Evidence for the Formation of Several Uranium Hydride Molecules". Journal of the American Chemical Society 119 (7): 1682–1687. doi:10.1021/ja9630809. http://pubs.acs.org/doi/pdf/10.1021/ja9630809. பார்த்த நாள்: 29 January 2013. 
  2. Raab, Juraj; Lindh, Roland H.; Wang, Xuefeng; Andrews, Lester; Gagliardi, Laura (2007). "A Combined Experimental and Theoretical Study of Uranium Polyhydrides with New Evidence for the Large Complex UH4(H2)6". The Journal of Physical Chemistry A 111 (28): 6383–6387. doi:10.1021/jp0713007. http://pubs.acs.org/doi/abs/10.1021/jp0713007. பார்த்த நாள்: 29 January 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=யுரேனியம்(IV)_ஐதரைடு&oldid=2095815" இலிருந்து மீள்விக்கப்பட்டது